பால் வளத்துறையில் முதல்வர் ஸ்டாலின் அடித்த அதிரடி சிக்சர்.. 47 பேருக்கு பணி நியமன ஆணை.

By Ezhilarasan BabuFirst Published Aug 21, 2021, 2:45 PM IST
Highlights

பால் வளத் துறையில் துணை பதிவாளர் மற்றும்  தேனி அலுவலகத்தில் பணியாற்றி கொரோனா காலகட்டத்தில் மரணமடைந்த பணியாளர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணியாற்றி மரணமடைந்த 47 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பால் வளத் துறையில் பணியாற்றி மரணமடைந்த 47 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் இன்று  முதல்வரால் வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பால் வளத் துறையில் துணை பதிவாளர் மற்றும்  தேனி அலுவலகத்தில் பணியாற்றி கொரோனா காலகட்டத்தில் மரணமடைந்த பணியாளர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணியாற்றி மரணமடைந்த 47 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.  

மேலும் விபத்தினால் இறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ரூபாய் 2.50 லட்சம் மற்றும் கல்வி உதவித் தொகையாக 25 ஆயிரம் ரூபாய், திருமண உதவித் தொகையாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் கூடுதல் நிதி உதவியாக விபத்தினால் மரணம் அடைந்த பால் உற்பத்தியாளர்களின் ஈமச்சடங்கு ரூபாய் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 44 பயனாளிகளுக்கு மொத்தம் ஒரு கோடியே 4 லட்சத்து 25 ஆயிரத்து 833-க்கான காசோலைகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

click me!