டாஸ்மாக் கடைகளுக்கு அதிரடி உத்தரவு... சென்னை உயர்நீதிமன்றம் போட்ட கிடுக்குப்பிடி..!

By Thiraviaraj RMFirst Published May 27, 2020, 2:24 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.  

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.  

கடந்த 15ம் தேதி உச்சநீதிமன்ற உத்த்ரவுப்படி மீண்டும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. அதற்கு முன் மதுபான கடைகள் திறக்கப்பட்ட போது குவாட்டருக்கு 10 ரூபாய் விலை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. ஆனால், விலையேற்றப்பட்ட பத்து ரூபார்க்கு பதிலாக குவாட்டருக்கு 30 ரூபாய்க்கும் அதிகமாக டாஸ்மாக் மதுபான கடைகளில் சட்டவிரோதமாக விலை உயர்த்தப்பட்டு விற்கப்பட்டது.

 

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது உயர்நீதிமன்றம், அரசு நிர்ணயித்த விலையில் தான் மதுபானங்கள் விற்கப் படுகின்றனவா? மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா? ஜூன் 26ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்கப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பப்பி உள்ளது நீதிமன்றம்.  

மே 7-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை 1362 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனை. இதனால் தமிழக அரசுக்கு 1062 கோடி ரூபாய் லாபம் வந்தது. தற்போது பாட்டிலுக்கு 30 ரூபாய்க்கும் அதிகமாக விற்பதால் அந்தப்பணம் அரசுக்கு செல்கிறதா? அல்லது டாஸ்மாக் பணியாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்களா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

click me!