போக்சோ சட்டத்தில் அதிரடி திருத்தம்… மேனகா காந்தி தயாரித்த புது சட்டம்!

Published : Dec 08, 2018, 11:47 AM IST
போக்சோ சட்டத்தில் அதிரடி திருத்தம்…  மேனகா காந்தி தயாரித்த புது சட்டம்!

சுருக்கம்

பாலியல் தொல்லையை ஏற்படுத்தும் வகையில், சிறுவர்களுக்கு, 'ஹார்மோன்' ஊசிகளை போட்டு, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், 'போக்சோ' சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.    

பல்வேறு பகுதிகளில், பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் எனப்படும், போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தூண்டுதலை ஏற்படுத்தி, ஹார்மோன் ஊசி போடுவோருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கும் வகையில், அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.

இதன்படி, சமூக வலைதளங்களில், குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுவோருக்கும் தண்டனை வழங்கப்படும்.

இதற்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான மேனகா காந்தி, அனுமதி அளித்துள்ளார். இதற்கான பரிந்துரை, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால தொடரில், இந்த திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!