தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்..!ஏபிவிபி அமைப்பின் கோழைத்தனமான செயல்- இறங்கி அடிக்கும் மு.க.ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Feb 20, 2023, 2:19 PM IST

பா.ஜ.க அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.


தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களை ABVP அமைப்பினரின் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும். புது டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு,

Universities are not just spaces for learning but also for discussion, debate & dissent.

The cowardly attack on Tamil students by ABVP & vandalising the portraits of leaders like Periyar, Karl Marx at , is highly condemnable and calls for a strict action from the Univ Admin.

— M.K.Stalin (@mkstalin)

Tap to resize

Latest Videos

 

பெரியார் படத்தை அடித்து நொறுக்கிய ஏபிவிபி

தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள ABVP அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு; பல்கலை நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன்.

திமுகவை நோக்கி பயணிக்கும் ஓபிஎஸ், ஆட்ட களத்தில் இல்லை.! நாக் அவுட் ஆகி விட்டார்- ஜெயக்குமார் கிண்டல்

முதலமைச்சர் கடும் கண்டனம்

தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பா.ஜ.க அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

சர்வாதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறார்.! பெயரை உச்சரிக்க கூட விரும்பவில்லை..! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஓபிஎஸ்

click me!