சட்டத்தை மதித்த கமல்ஹாசன் ! அப்துல் கலாம் பள்ளிக்கு செல்லும் திட்டம் ரத்து!!

 
Published : Feb 21, 2018, 07:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
சட்டத்தை மதித்த கமல்ஹாசன் ! அப்துல் கலாம் பள்ளிக்கு செல்லும் திட்டம் ரத்து!!

சுருக்கம்

abdul kalam school programme cancel by kamal

நடிகர் கமலஹாசன், அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு சென்று மாணவர்களை சந்திக்கு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்ததையடுத்து அத்திட்டத்தை கமல்ஹாசன் ரத்து செய்துள்ளார

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். இன்று ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்கலாம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கவிருக்கிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். 

இந்நிலையில், கலாம் படித்த பள்ளிக்கு செல்ல கமல்ஹாசனுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். மேலும் இந்து அமைப்புகள் சார்பில் அப்துல் கலாம் பள்ளிக்குள் கமலஹாசனை நுழைவிடக்கூடாது  என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர் எதிர்ப்பு காரணமாக அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு சென்று கமல்ஹாசன் மாணவர்களை சந்திக்கும் திட்டத்துக்கு தமிழக கல்வித்துறை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8.15 மணிக்கு அப்துல் கலாம் பள்ளிக்கு நடிகர் கமலசன் செல்வதாக இருந்தது. ஆனால் இதற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்துஇ சட்டத்தை மதிக்கும் வகையில்,அத்திட்டத்தை நடிகர் கமலஹாசன் ரத்து செய்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!