
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படித்த பள்ளியில் நுழைவதற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்பாக உத்தரவை தமிழக கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். இன்று ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்கலாம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கவிருக்கிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.
தனது கட்சிப் பெயர், கொடி, கொள்கை உள்ளிட்டவற்றை தனது ரசிகர்கள் முன்பு இன்று அறிவிக்கிறார். பின்னர் இன்று மாலை 6.30 மணிக்கு மதுரையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கமல் உரையாற்றுகிறார்.
இந்நிலையில், கலாம் படித்த பள்ளிக்கு செல்ல கமல்ஹாசனுக்கு தடை விதித்த தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். மேலும் இந்து அமைப்புகள் சார்பில் அப்துல் கலாம் பள்ளிக்குள் கமலஹாசனை நுழைவிடக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன், அரசியல் நோக்கத்தோடு பள்ளிக்கு வருவதாக நிறைய புகார்கள் வந்ததாகவும், மாணவர்களுடன் அரசியல்வாதிகள் கலந்துரையாட இடமில்லை என்று கூறிய மண்டபம் தொடக்கக் கல்வி அதிகாரி, இதனால் அப்துல் கலாம் படித்த பள்ளியில் நுழைவதற்கு கமலுக்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.