
ஆட்டோ டிரைவரிடம் எகிறியது நான்தான், வாட்ஸ் அப்பில் முழு ஆடியோவையும் வெளியிட்டால்தான் உண்மை தெரியும் என ஆறுகுட்டி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள கல்லூரி பகுதியில் ஆட்டோ ஸ்டான்ட் ஒன்று உள்ளது. இங்கு 30 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், திமுகவை சேர்ந்த நடராஜ் என்பவர் புதிதாக ஆட்டோ வாங்கி அப்பகுதியில் நிறுத்த வந்துள்ளார்.
இதை பார்த்த அண்ணா தொழிற்சங்கத்தினர் ஏற்கனவே இங்கு அதிக ஆட்டோக்கள் இருப்பதால் சவாரி கிடைக்காது என கூறி அவரை தடுத்துள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ ஆறுகுட்டியிடம் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து எம்.எல்.ஏஆறுகுட்டி, நடராஜை போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது காரசார விவாதங்கள் நடைபெற்றதாக தெரிகிறது. இந்நிலையில், இதுகுறித்த ஆடியோவை நாகராஜ் வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆறுகுட்டி எம்.எல்.ஏ கூறியதாவது:
வாட்ஸ் அப்பீல் வெளியானது எனது பேச்சு தான்.
வீண் பிரச்சினை செய்யும் நபரிடம் நான் கெஞ்சி கொண்டு பேச முடியாது.
சில நேரத்தில் இதுபோல் பேசினால் தான் புரியும்.
அதேநேரத்தில் வாட்ஸ் அப்பீல் நான் பேசியதையும், ஆட்டோ டிரைவர் நடராஜ் பேசியதையும் முழுமையாக வெளியிட்டால் தான் எல்லோருக்கும் உண்மை தெரியவரும்.
நான் பேசு வதை மட்டும் பரவ செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.