
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்த இருந்த உண்ணாவிரதப் போராட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. இரண்டாம் கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பதிலாக வாங்கல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே உண்ணாவிரதம் இருக்க பாலாஜிக்கு கரூர் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியது. இந்தச் சூழலில் உண்ணாவிரதப் போராட்டம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய செந்தில்பாலாஜி, நீதிமன்ற அனுமதி பெற்று கரூர் தாலுக்காக அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.