இபிஎஸ்-ஓபிஎஸ் பதவி சண்டைக்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம்..! பரபரப்பு புகார் தெரிவித்த ஆம் ஆத்மி

By Ajmal KhanFirst Published Jul 12, 2022, 9:08 AM IST
Highlights

ஊழல் வழக்கில் கம்பி எண்ண வேண்டிய முன்னால் அமைச்சர்கள்,அதிகாரிகளை இன்னும் வெளியில் வைத்திருப்பது ஏன்? எனவும் ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன்  கேள்வி? எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை நீக்கி உத்தரவிட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஆம்ஆத்மி கட்சியின் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரகன்,  கடந்த அண்ணா திமுக ஆட்சியில்  ஊழல் செய்யாத அமைச்சர்களை இல்லை அதிகாரிகளே இல்லை என்கிற அளவில் இருந்தது தான் உண்மை. பல லட்சம் கோடி ஊழல் செய்தார்கள் என்பதே தகவல், அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள், பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி அவர்கள் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து ஆதாரங்களுடன் இவர்கள் மீது ஊழல் பட்டியலை கொடுத்து ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் அதிகாரிகள்  மீது நடவடிக்கை எடுக்க தனித்தனியே சென்று வலியுறுத்தினார்கள என கூறியுள்ளார்.

திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்..? அமைச்சர் பதிலால் அதிர்ச்சியில் அதிமுக

பதவி சண்டை தடுக்கப்பட்டிருக்கும்

எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதாவது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் அதிகாரிகள் மீது தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்படும் என்றும் நாங்கள் ஆட்சிக்கு வந்த மூன்றே நாளில் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று  தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் இதுவரை எந்த தனி நீதிமன்றமும் அமைக்கப்படவில்லை ஊழல் செய்த அத்தனை அமைச்சர்களும் ஐஏஎஸ் அதிகாரிகளும் தைரியமாக தற்பொழுது உலாவிக் கொண்டிருக்கிறார்கள் ஊழல் செய்த அத்தனை பேரும் உத்தமர்கள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். மிகப்பெரும் ஊழல்வாதிகளான இபிஎஸ் ஓபிஎஸ்  பதவிச் சண்டை வினோதமாக இருக்கிறது, இரு புனிதர்களும் நியாயவான்கள் போல் மாறி மாறி பேட்டி  கொடுத்து கொண்டிருக்கிறார்கள். திமுக அரசு இவர்கள் மீது முறையான நடவடிக்கையை தாமதிக்காமல் லோக் ஆயூக்தா அல்லது தனி நீதி மன்றம் மூலம் எடுத்திருந்தால்  வருங்காலத்தில் இவர்களை போன்ற போலி அரசியல்வாதிகள் வரவு தடுக்கப்படும். தற்பொழுது இவங்களுக்குள் பதவி சண்டை வந்துருக்காது சிறையில் இருந்திருப்பார்கள் என கூறியுள்ளார்.

உங்களுக்கும் மோடிக்கு என்ன வித்தியாசம் இருக்குது ஸ்டாலின்.. இதுதான் திராவிட மாடலா? சீறும் சீமான்..!

உடனடியாக கைது செய்ய வேண்டும்

மு க ஸ்டாலின் அவர்கள் அதிமுக அமைச்சர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறார்,  சிறையில் இருக்க வேண்டியவர்களை வெளியில் நடமாட விட்டிருப்பது ஏன்?   மு.க.ஸ்டாலின்,  எடப்பாடி பழனிச்சாமிக்கு பயப்படுகிறாரா  அல்லது ஊழல்வாதிகளான இவர்களை மன்னித்து விட்டாரா அல்லது ஊழலை வரவேற்கிறாரா  என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தான் விளக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தற்பொழுது அரசியல் கூத்து நடத்திக்கொண்டிருக்கும் இபிஎஸ் ஓபிஎஸ் மற்றும் அவர்களின் வகையறாக்கள் ஊழல்வாதிகள் அத்தனைபேரையும் இனியும் தாமதிக்காமல் உடனடியாக ஊழல் வழக்குகளை லோக் ஆயுக்தா அல்லது தனி நீதி மன்றம் மூலம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து தகுந்த  தண்டனையை வழங்க வேண்டும் மேலும் ஊழல்வாதிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக வசீகரன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

மீண்டும் திமுகவில் கடலூர் எம்.எல்.ஏ.. திடீரென மனம் மாறிய திமுக தலைமை.. வேலை செய்த பாஜக அஸ்திரம்?

 

click me!