தொடர்ந்து, திமுக கட்சி தலைவர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை தகுந்த நேரத்தில் எடுக்கப்படவில்லை என்றால் உண்மையான திமுக தொண்டர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் நிலை ஏற்படும், அப்படி அவர்கள் செயல்படும்போது சட்டம் கிட்டம்னு சொல்லாதீங்க என அவர் காட்டமாக எச்சரித்துள்ளார்.
திமுக மீதும் திமுக தலைவர்கள் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் ஈன பிறவிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்ப்பது மிகுந்த மன வேதனை தருகிறது என்று திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆதங்கம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. தொடர்ந்து அரசுக்கு மக்கள் நல் ஆதரவு அளித்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் ரவுடிகளை குறிவைத்த போலீசார் களமிறங்கினார்.
இதையும் படியுங்கள்: முகத்துக்கு நேரா அடுக்கு மொழியில் ஓவர் புகழ்ச்சி... எல். முருகனை வெட்கத்தில் நெளிய வைத்த டி.ராஜேந்தர்.
திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னரும், திமுகவுக்கு எதிரான சமூகவலைதளத்தில் நடந்து வரும் அவதூறு பிரச்சாரங்கள் மேலும் அதிகரித்துள்ளதே தவிற குறையவில்லை. இந்நிலையில் தனது ஆதங்கத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, சமூக வலைதளத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்கிறது. ஆனால் அப்படிப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. இது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. எதற்கும் ஒரு அளவு உண்டு, ஜனநாயகம் மிகுதியும் நல்லதல்ல என அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: நான் குழந்தை பெற்றுத்தர மறுத்தேனா.? கருவை கலைத்தேனா.? நான் ஒருபோதும் உடைந்து போகமாட்டேன்.. சமந்தா உருக்கம்.
தொடர்ந்து, திமுக கட்சி தலைவர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை தகுந்த நேரத்தில் எடுக்கப்படவில்லை என்றால் உண்மையான திமுக தொண்டர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் நிலை ஏற்படும், அப்படி அவர்கள் செயல்படும்போது சட்டம் கிட்டம்னு சொல்லாதீங்க என அவர் காட்டமாக எச்சரித்துள்ளார். திமுகவினர் மீது தொடர்ந்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி காவல்துறையில் புகார் கொடுத்தாலும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, அதனால்தான் எம்எல்ஏ இவ்வாறு பதிவிட்டுள்ளார் என அவருக்கு ஆதரவாக உடன்பிறப்புகள் குரல் கொடுத்துள்ளனர். எம்ஏல்ஏ டிஆர்பி ராஜாவின் கருத்து கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.