அரசியல் என்னோடு போகட்டும்.. என் மகன் வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை.. வைகோ ஓபன் டாக்..!

By vinoth kumarFirst Published Oct 9, 2021, 12:29 PM IST
Highlights

 56 ஆண்டுகால அரசியலில் கஷ்டப்பட்டிருக்கிறேன். 28 ஆண்டுகாலம் லட்சக்கணக்கான கிலோமீட்டர்  பயணம் செய்துள்ளேன். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடைபயணம்  மேற்கொண்டு இருக்கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டங்கள். ஐந்தரை ஆண்டுகாலம் ஜெயில் வாழ்க்கை என அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன். 

எனது மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவது எனக்கு துளி அளவு கூட விருப்பமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விடுப்பட்ட 9 மாவட்டங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ அகிய இருவரும் தங்கள் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குகளை பதிவு செய்தனர். 

இதையும் படிங்க;- பிள்ளை பிறக்கவே 10 மாதம் ஆகிறது.. ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் என்ன செய்ய முடியும்.. அமைச்சர் துரைமுருகன்..!

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ;- என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. 56 ஆண்டுகால அரசியலில் கஷ்டப்பட்டிருக்கிறேன். 28 ஆண்டுகாலம் லட்சக்கணக்கான கிலோமீட்டர்  பயணம் செய்துள்ளேன். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடைபயணம்  மேற்கொண்டு இருக்கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டங்கள். ஐந்தரை ஆண்டுகாலம் ஜெயில் வாழ்க்கை என அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன். 

இதையும் படிங்க;- செடி புதருக்குள் இருந்து வரும் முனங்கல் சத்தம்... காதலர்களுக்கு படுக்கை அறையாக மாறிய வண்டலூர் பூங்கா..!

அதனால் அரசியல் என்னோடு போகட்டும். என் மகன் அரசியலுக்கு வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. எனது மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவது எனக்கு துளி அளவு கூட விருப்பமில்லை. அவர் அரசியலுக்கு வருவதை 20ம் தேதி நடைபெறும் கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிவு செய்யும். அதில் அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதற்கு நான் முழு மனதுடன் கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார். 

click me!