ஸ்டாலினால் முடிகிறது.. 7 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் மோடியால் முடியவில்லை.. கேவலமாக விமர்சிக்கும் kS.அழகிரி.!

Published : Oct 09, 2021, 11:50 AM ISTUpdated : Oct 09, 2021, 12:05 PM IST
ஸ்டாலினால் முடிகிறது.. 7 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் மோடியால் முடியவில்லை.. கேவலமாக விமர்சிக்கும் kS.அழகிரி.!

சுருக்கம்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார். இதையே, வாடிக்கையாக கொண்டுள்ளார். தந்தை பெரியார் முதல் இன்றைய தலைவர்கள் வரை யாரையும் விடுவதில்லை. தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை மீறி அறுவெறுக்கத்தக்க வகையில் பேசுகிறார். 

தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை மீறி அறுவெறுக்கத்தக்க வகையில் சீமான் பேசு வருகிறார் என  கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார். இதையே, வாடிக்கையாக கொண்டுள்ளார். தந்தை பெரியார் முதல் இன்றைய தலைவர்கள் வரை யாரையும் விடுவதில்லை. தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை மீறி அறுவெறுக்கத்தக்க வகையில் பேசுகிறார். 

இதையும் படிங்க;- நாம் தமிழர் கட்சி பயங்கரவாத அமைப்பாக மாற வாய்ப்பு.. சீமான் குறித்து அதிர்ச்சி தகவலை தெரிவித்த KS.அழகிரி..!

இப்படி தரக்குறைவாக பேசுங்கள் என நமது இதிகாசங்களும் , நம் முன்னோர்களும் நமக்கு சொல்லித்தரவில்லை. இதை சீமான் உணர வேண்டும். ஜனநாயகம் என்ற போர்வையில் வரம்பு மீறுகிறார். பிறர் மனம் புண்படும்படியாக பேசுவதை யாரும் ஏற்க மாட்டார்கள். பதிலுக்கு பேச ஆரம்பித்தால் நிலைமை மோசமாகும். அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி அவதூறாக பேசிய சீமான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர ஆணையரிடம் புகார் மனு அளித்ததோம் என்றார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை  எடுக்காவிட்டால் எங்களது நடவடிக்கை மாறும். நாங்கள் எந்த தியாகமும் செய்ய தயார். ஏனென்றால் நாங்கள் ஆங்கிலேயர்களையே எதிர்த்து போராடியவர்கள் என தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று வெறும் நாற்பது நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தார். ஆனால், பிரதமர்பதவி ஏற்று 7 ஆண்டுகள் ஆண பிறகும் அவரால் பெட்ரோல் விலையை 3 ரூபாய் அளவுக்குகூட குறைக்க முடியவில்லை என விமர்சனம் செய்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!