சட்டபடிப்பை நிறைவு செய்து உச்சநீதி மன்ற வழக்கறிஞராக காத்திருக்கும் மகளுடன் ஆ.ராசா.. செம்ம போட்டோ.

By Ezhilarasan BabuFirst Published Jul 30, 2021, 9:11 PM IST
Highlights

ஆ. ராசா என்றாலே 2ஜி அலைக்கற்றை வழக்கும், அதிலிருந்து மீண்டு வர அவர் நடத்திய சட்டப் போராட்டமும்தான் உடனே பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும் அது. 

முன்னாள் மத்திய அமைச்சரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா மற்றும் அவரது மனைவியைப் போலவே அவரது ஒரே மகள் மயூரி சட்டப் படிப்பை நிறைவு செய்து தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் பதிவு செய்ய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள நிலையில், மயூரி ராசாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஆ. ராசா என்றாலே 2ஜி அலைக்கற்றை வழக்கும், அதிலிருந்து மீண்டு வர அவர் நடத்திய சட்டப் போராட்டமும்தான் உடனே பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும் அது. அவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தபோது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  தன் மீதான குற்றச்சாட்டுக்கு தானே வழக்கு நடத்தி, வாதாடி தனக்கு எதிராக வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் சட்ட அறிவாலும், வாதத் திறமையாலும் அடித்து துவம்சம் செய்தவர் ராசா. அது புனையப்பட்டது ஒன்று என்றும், தான் குற்றமற்றவன் எனவும் நிரூபித்தார் ராசா,  

தான் முழு நேர அரசியல் வாதியாக இருந்தபோதும், முழுநேர, உச்சநீதி மன்ற சீனியர் வழக்கறிஞர்களையே வாயடைக்க வைத்து, வாதத் திறமையும், சட்ட நிபுணத்துவமும், அரசியல் நுணுக்கமும் ஒருங்கே கொண்ட ஆற்றலாளராக வலம் வருகிறார் ராசா. உலகே ஆர்வத்தோடு எதிர்நோக்கிய 2ஜி வழக்கில்  தன் சட்ட அறிவால், வழக்கிலிருந்து மீண்டது மட்டுமல்லாமல், வழக்கின் விவரங்களை நூலாக தொகுத்து வெளியிட்டவர் அவர். சொந்தக் கட்சிக்காரர்களாலேயே விமர்சிக்கப்பட்ட போதும்கூட தளராமல், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, வழக்கு நடத்தி வாகை சூடியவர் ராசா. சாதாரண கூலித் தொழிலாளியின் மகனாக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, திமுக என்னும் மிகப்பெரிய கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதிவிவரை அவர் உயர்ந்திருக்கிறார் என்றால் அவருக்குள்ள  அரசியல் தெளிவும், தளராக நெஞ்சுறுதியும்தான் காரணம் என பலரும் பாராட்டுகின்றனர். அவர் எதிர்கொண்ட அத்தனை நெருக்கடியிலும் சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடன் இருந்து அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் அவரது மனைவி பரமேஸ்வரி. அவர் கடந்த  29ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழ்ந்தார், அது மிகப்பெரிய அளவில் அவரை சுக்கு நூறாக நொறுங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

உற்ற துணையாக இருந்த மனைவியை அவர் இழந்து வாடும் இந்த நேரத்தில், தனது தந்தை எதிர்கொண்ட சட்ட போராட்டத்தையே பார்த்து வளர்ந்த அவரது தவப்புதல்வி தந்தை, தாயாரின் வழியில் சட்டப்படிப்பை நிறைவு செய்து, இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் வழக்கறிஞர் சங்கத்தில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி பலரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. திமுகவினர் உறவினர்  மயூரிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தன் தந்தையையே தனக்கு ஒரு ரோல் மாடலாக எடுத்து சட்டம் பயின்று வந்த மயூரி ராசா நிச்சயம்  உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பணியில்  தனி முத்திரை பதிப்பார் என்பதில் சந்தேகமில்லை. 
 

click me!