ஆ. ராசா மனைவி கவலைக்கிடம்.. திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..

By Ezhilarasan BabuFirst Published May 29, 2021, 3:03 PM IST
Highlights

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவின் மனைவி பரமேஸ்வரி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவின் மனைவி பரமேஸ்வரி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவின் மனைவி பரமேஸ்வரி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவின் மனைவி பரமேஸ்வரி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். 

இதற்கு முன்னர் ஏற்கனவே சில மருத்துவமனைகளில் ராசா மனைவி சிகிச்சை எடுத்தார். ஆனால் அங்கு கொடுக்கப்பட்ட கீமோதெரபி சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் நோய் தன்மை மேலும் தீவிரம் அடைந்ததை அடுத்து குரோம்பேட்டை ரேலா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக  ஆ.ராசா எம்பி கடந்த சில நாட்களாக அவரது மனைவியுடன் தங்கி இருந்து அவரை கவனித்து வருகிறார். 

அதனால் தேர்தலுக்குப்பின் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி, உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் கூட அவர் கலந்து கொள்ள முடியவில்லை. முழுவதுமாக தனது மனைவியுடன் இருந்து கவனித்து வருகிறார்.  கடந்த மூன்று நாட்களாகவே அவரது மனைவி பரமேஸ்வரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  கவலைக்கிடமான நிலையில் இருந்துவருகிறார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மனைவி தீவிர புற்றுநோயாள் பாதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர் ஆக்சிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார் .

இந்நிலையில் அவரது குடும்பத்தினரை தமிழக முதலமைச்சர் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில்  அவரது உடல் நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக நிலையில் இருந்து வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று நெருக்கடியிலும் கூட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்த ராசாவின் மனைவியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்ததும் கட்டி அணைத்து ராசா கண்கலங்கினார். மருத்துவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்திருந்தார். மேலும் விரைவில் குணமாகி விடுவார் எனவும், நம்பிக்கையாக இருங்கள் என அவர் ராசாவுக்கு ஆறுதல் கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் முதல்வர் இன்று ராசாவின் குடும்பத்தினரை சந்தித்து அறுதல் கூறியுள்ளது குறிப்பிடதக்கது. 


 

click me!