நித்யானந்தாவுடன் இருந்தும் இதையும் கவனிக்கிறாரா..? சென்னையில் ரஞ்சிதாவின் பக்கத்து வீட்டில் நடந்த காரியம்..!

Published : May 29, 2021, 02:39 PM ISTUpdated : May 29, 2021, 04:30 PM IST
நித்யானந்தாவுடன் இருந்தும் இதையும் கவனிக்கிறாரா..? சென்னையில் ரஞ்சிதாவின் பக்கத்து வீட்டில் நடந்த காரியம்..!

சுருக்கம்

எழுத்தாளர் சுபா வெங்கட் நேற்று இறந்த நிலையில் கைலாசாவிற்கு இப்போது தான் தகவல் எட்டியிருக்குமோ..?

தமிழ் சினிமாவின் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வலம் வந்த நடிகை ரஞ்சிதா, ராணுவ அதிகாரி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் குழந்தைகளை பெற்றுக் கொண்ட அவர், பிரபல சாமியாரான நித்தியானந்தாவின் சீடரானார். அடுத்தடுத்து வீடியோக்கள் விவகாரங்கள் பெரிதாக,  தன் பெயரை ‘மா நித்யானந்த மாயி’ என மாற்றிக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகிவிட்டார்,  தனித் தீவான ‘கைலாசா’என்ற புதிய நாட்டினை உருவாக்கி வருவதாக தெரிவித்துவருகிறார் நித்தியானந்தா. அத்தீவில்தான் ரஞ்சிதாவும் ரகசியக் காதலியாக இருப்பதாக தகவல்.

 

இந்நிலையில், மறைந்த தமிழ்திரையுலக நடிகர் வெங்கட் சுபாவுக்காக ரஞ்சிதா இரங்கல் தெரிவித்திருக்கிறார். வெங்கட்டின் இழப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று தெரிவித்திருக்கும் ரஞ்சிதா, வெங்கட் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.விஜயகாந்த் நடித்த ‘பூந்தோட்ட காவல்காரன்’படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானா தயாரிப்பாளர் சிவா. அவரது அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து, அரவிந்தன், சரோஜா, கனிமொழி, அரவான் 20 படங்களை தயாரித்திருக்கிறது. அம்மா கிரியேஷன்சில் தயாரிப்பு மேற்பார்வையாளராக இருந்தவர் வெங்கட். அவர் கொரோனாவால் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரபல நடிகையாக இருந்த ரஞ்சிதாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கத்தில் அம்மா கிரியேஷன்ஸ் அலுவலகத்திற்கு அருகில்தான் ரஞ்சிதாவின் வீடு இருக்கிறது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், தனது சினிமாவையும், தன்னுடன் பழகியவர்களையும் தொடர்ந்து கவனித்து வரும் ரஞ்சிதா, எழுத்தாளர் சுபா வெங்கட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  சுபா வெங்கர் நேற்று  இறந்த நிலையில் உடனே கைலாசாவிற்கு  தகவல் எட்டியிருப்பது ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி