மார்ஃபிங் செய்து மாட்டிக்கொண்ட ஆ.ராசா... மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்த அல்வா..!

By Thiraviaraj RMFirst Published Jul 22, 2020, 11:12 AM IST
Highlights

போராட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை மார்பிங் செய்து பதாகையை மட்டும் மாற்றி புகைப்படத்தை வெளியிட்ட ஆ.ராசாவின் செயல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

போராட்டத்தில் ஈடுபடாமலேயே கலந்து கொண்டதாக மார்பிங் செய்யப்பட்ட தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான ஆ.ராசாவின் குட்டு வெளிப்பட்டுள்ளது. 

சாத்தான்குளம் போலீஸ் தாக்கி பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கொல்லப்பட்டதை கண்டித்து கடந்த மாதம் 30ம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது திமுகவினர் வீடுகளுக்கு முன் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த போரட்டத்தில் பதாகையை ஏந்தி நின்ற புகைப்படத்தை ஆ.ராசா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

நேற்று மின்சார கட்டணத்தை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது திமுகவினர் தங்களது வீட்டுக்கு முன் நின்று பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்தப்போராட்டத்திலும் பதாகையை ஏந்தி நின்ற புகைப்படத்தை ஆ.ராசா வெளியிட்டு இருந்தார். ஆனால் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை மார்பிங் செய்து பதாகையை மட்டும் மாற்றி புகைப்படத்தை வெளியிட்ட ஆ.ராசாவின் செயல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

மோசமான போட்டோசாப் செய்து மாட்டி கொண்ட திமுக ஆ.ராசா.

திமுக தலைவர் ஸ்டாலினை ஏமாற்றும் செயல் என திமுக தொண்டர்கள் வருத்தம்..

😂😂😂😂 pic.twitter.com/pOorvCabpe

— Nalla Singam (@sivakasisingam)

 

அதாவது போராட்டத்தில் பங்கேற்காமலேயே தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டளையை மதிக்காமல் அவரை ஏமாற்றும் விதமாக போட்டோவை மார்பிங் செய்து போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆ.ராசா ஏமாற்றியுள்ளார் என அவரது செயலை அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.  
 

click me!