
மத்திய தொலைத் தொடர்புத் துறையில் அமைச்சராக இருந்த திமுக.,வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, டிவிட்டரில் இணைந்துள்ளார். வெகுகாலம் கழித்து, இப்போது டிவிட்டரில் இணைந்துள்ளார் ராசா.
இது தொடர்பாக தனது முதல் பதிவாக, ட்விட்டர் எனும் சமூக வலைதளம் இயங்கும் 3G அலைக்கற்றையை அறிமுகப்படுத்தியவன் என ட்விட் செய்துள்ளார். இன்று நீங்கள் பயன்படுத்தும் டிவிட்டர் செயல்படும் 3ஜி.,க்கு காரணகர்த்தா என்ற வகையில் டிவிட்டரில் இணைவதாகக் கூறிய்யுள்ளார்.
தற்போது 4ஜி நெட்வொர்க் கோலோச்சுகிறது. அடுத்து 5ஜி குறித்து இந்தியாவில் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் 5ஜி சேவைக்கு இந்தியா மாறப் போகிறது. ஆனால், வெகு காலம் நீடித்து நடந்து வந்த 2ஜி வழக்கில், தவறு நடந்துள்ளது, ஆனால் தவறை நிரூபிக்க சிபிஐயால் இயலவில்லை என்ற ரீதியில் தீர்ப்பு வழங்கப்பட்டு, ராசா விடுதலையாகி வெளியில் வந்துள்ளார்.
அதனால் இப்போது, சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்துள்ளார். ‘டிவிட்டர்’ எனும் சமூக வலைத்தளம் இயங்கும் 3G அலைக்கற்றையை தேசத்திற்கு அறிமுகப்படுத்தியவன் எனும் பெருமிதத்தோடு உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன் என்று தனது முதல் டிவிட்டில் பதிவு செய்துள்ளார்.
சமூக தளம் என்பது பல்வேறு கருத்துகளை கட்டுப்பாடற்ற வகையில் சுதந்திரத்துடன் வெளிப்படுத்தும் தளமாக உள்ளது. இதனால் பலரும் தங்கள் நோக்கம்போல், திட்டித் தீர்ப்பதும் உண்டு. கருத்து மோதல்களால் நிறைந்த களத்துக்கு வந்திருக்கும் ஆ.ராசாவுக்கு இனி பதில் அளிப்பவர்கள் டிவிட்டரை நாடுவார்கள் என்று கூறலாம்.
அவரது கன்னி டிவிட்....