50 ஆயிரம் கோடிக்கு அதிபதி செந்தில் பாலாஜி.? நோட்டா கிட்ட வச்சுக்கோ எங்க ஏட்டா கிட்ட வேணாம்.? திமுக- பாஜக மோதல்

By Ajmal KhanFirst Published Sep 14, 2022, 11:48 AM IST
Highlights

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் கரூர், கோவை மாவட்டத்தில் போஸ்டர் யுத்தம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

திமுக- பாஜக மோதல்

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜகவினர் கடும் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். பாஜகவின் முதல் குற்றச்சாட்டாக மின் வாரிய ஒப்பந்தத்தில் கோபாலபுரத்தை சேர்ந்தவர்களுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடாக ஒப்பந்தம் வழங்கியதாக தெரிவித்து இருந்தனர். மேலும் நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெற்றதாகவும் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் ஊழல் புகார்களையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார். இந்த மோதல் போக்கால் அண்ணாமலை, செந்தில் பாலாஜிக்கு சவால் விடுவதும், செந்தில் பாலாஜி அண்ணாமலைக்கு சவால் விடுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனையடுத்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கை ஓங்கியிருந்தநிலையில் அதனை கட்டுப்படுத்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் பாலாஜியை கோவைக்கு பொறுப்பாக திமுக தலைமை நியமித்தது. இதனையடுத்து களத்தில் இறங்கிய செந்தில் பாலாஜி கோவையை திமுக கோட்டையாக மாற்றி அசத்தினார்.  

திமுகவை எதிர்க்க அதிமுகவிற்கு வலிமை வேண்டும்...! நாடாளுமன்ற தேர்தலோடு முடிவு கட்டுகிறேன்- சூளுரைத்த சசிகலா

50 ஆயிரம் கோடிக்கு அதிபதி

சட்டமன்ற தேர்தலில் கோவையில் 10 தொகுதியில் தோல்வி அடைந்த திமுக அடுத்து நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்றி  பதிலடி கொடுத்தது. இந்த மோதல் போக்கு தற்போதும் தொடர்ந்து கொண்டே வந்த நிலையில் பொள்ளாட்சியில் மிகப்பெரிய அளவிலான திமுக பொதுக்கூட்டத்தை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அழைத்து வந்து செந்தில் பாலாஜி நடத்தினார். இந்த கூட்டத்தில் பாஜக மகளிர் அணி நிர்வாகி உள்ளிட்ட 50ஆயிரம் பேர் இணைந்தனர். இதனை குறிக்கும் விதமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கரூர் நகரில் 50 ஆயிரம் கோடியின் அதிபதி செந்தில் பாலாஜி என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இந்த போஸ்டர்கள் கரூரின் முக்கிய இடங்கள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி வசிக்கும் தெரு என அனைத்து இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது.

புலியை தெலுங்கானாவில் பார்த்து பயந்து ஓடிவந்து தமிழகத்தில் முறம் வீசுவதா..? தமிழிசையை விமர்சித்த முரசொலி

நோட்டா கிட்ட வச்சுக்கோ

இந்த போஸ்டரால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர், இதற்கு  பதில் அளிக்கும் வகையில் பாஜகவை கிண்டல் செய்து கோவை பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் நோட்டா கிட்ட வச்சுக்கோ எங்க ஏட்டா கிட்ட வேணண்டா என அச்சடித்துள்ளனர். இதன் காரணமாக கோவை பகுதியில் திமுக- பாஜக இடையே போஸ்டர் மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

இதையும் படியுங்கள்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா..? கச்சா எண்ணெய் விலை சரிவு...! மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த வேல்முருகன்

 

click me!