திரை அரங்கில் ரஜினியை கிண்டல் செய்த நபர்..! இடைவேளையில் கவனித்துக்கொண்ட ரசிகர்கள்..! சென்னையில்..

First Published Jun 7, 2018, 5:16 PM IST
Highlights
a person insulting rajini in theatre and they teated in interval time


காலா திரைப்படம் திரையிடப்பட்ட திரை அரங்கு ஒன்றில் இன்று ரஜினி ரசிகர்களுக்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரை அரங்கில் காலா திரையிடப்பட்ட போது, பட தொடக்கத்தில் ரஜினி என்டர் ஆகும் காட்சியை பார்த்து சிலர் கிண்டல் செய்து உள்ளனர்

இதனை கண்டு கோபம் அடைந்த ரஜினி ரசிகர்கள் இடைவேளையில் பார்த்துக்கொள்ளலாம் என அமைதியாக இருந்துள்ளனர்.

பின்னர் இடைவேளையின் போது, இது குறித்து அந்த நபர்களிடம் பேசிய ரசிகர்கள் அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

காலா படத்தில் ரஜினி என்டர் ஆகும் காட்சியை கிண்டல் செய்தவர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இது குறித்து திரை அரங்கு நிர்வாகி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டு உள்ளார்

ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு  வருவதை பார்த்து, தமிழ் நாட்டை  தமிழன் தான் ஆள வேண்டும் எனவும், ரஜினி கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும் பரப்புரை செய்வார் சீமான்

மேலும், தமிழகத்தில் அடுத்ததடுத்து நடந்து வரும் பல போராட்டத்தில்  நாம் தமிழர் கட்சியினர் நடந்துகொள்ளும் விதம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது

உதராணம் :

ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் சென்னையில் நடைபெற கூடாது என  போராட்டம் நடத்திய போது பாதுக்காவலர் ஒருவரை சரமாரியாக  அடித்து உதைத்த நபர் நாம் தமிழர் கட்சி..பிறகு இவர் கைது செய்யப்பட்டு  உரிய முறையில் போலீசார் கவனித்து விட்டனர்

அடுத்து, தூத்துக்குடி போராட்டத்தில் கடைசி நாளில் உள்நுழைந்த நாம் தமிழர் கட்சியினர்  காருக்கு தீ  வைத்து எரித்து விட்டனர்

ஐபிஎல் மேட்ச் நடைபெறும் போது, மைதானத்தில் செருப்பை வீசி  தமிழர்களின் மானத்தை வாங்கிய கதையை பலரும் சமூக  வலைத்தளங்களில் சரமாரியாக புகழ்ந்து தள்ளிவிட்டனர்

அடுத்து தற்போது காலா படம் திரையிடப்பட்ட இன்று கூட  திரை அரங்குகளில் ரஜினியை கிண்டல் செய்து ரசிகர்களை வம்புக்கு இழுத்து  உள்ளது

விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் கூட சண்டை ஏற்பட்டது....

இந்த அனைத்து செயல்களுக்கு பின்னணியில் நாம் தமிழர் கட்சியினர்  இருப்பது அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

click me!