இந்தியாவை உயிரென நேசித்த முஸ்லீம் நாட்டுக்காக உயிரை இழந்தார்..! வாசிம் பாரி இஸ் தி கிரேட்..!

By Thiraviaraj RMFirst Published Jul 9, 2020, 4:35 PM IST
Highlights

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் தீவிரவாதிகளால் தந்தை, சகோதரர் ஆகியோருடன் சுட்டுக் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் வாசிம்பாரி இந்தியாவை உயிரென நேசித்தவர். 
 

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் தீவிரவாதிகளால் தந்தை, சகோதரர் ஆகியோருடன் சுட்டுக் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் வாசிம்பாரி இந்தியாவை உயிரென நேசித்தவர். 

தங்களது வீட்டுக்கு அருகில் நடத்தி வரும் சொந்த கடை ஒன்றில் இவர்கள் மூவரும் நேற்று மாலை இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரியை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த தாக்குதலில் வாசிம் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் காயமடைந்ததனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரும் துரதிருஷ்வடமாக இறந்துவிட்டனர். 

காஷ்மீரில் நடந்த இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி விசாரித்ததாகவும், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலக அதிகாரி ஜிதேந்திர சிங் நேற்றிரவு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

காஷ்மீரில் தேசியவாதத்தின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இந்த தாக்குதல் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக ஜம்மு-காஷ்மீருக்கான செய்தித்தொடர்பாளர் அனில் குப்தா, "இதுபோன்ற தாக்குதல்கள் காஷ்மீரில் எங்களது குரலை மட்டுப்படுத்தாது. கடந்த மூன்றாண்டுகளாக வாசிம் பாஜகவின் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். மிகவும் சுறுசுறுப்பான தொண்டரான அவர், சமூக சேவைகளையும் செய்து வந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்தபோது நாங்கள் அதிர்ந்துவிட்டோம். தங்களுக்கு சொந்தமான கடையில் அவர்கள் இருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர்" என்று அவர் தெரிவித்தார்.

தேச நலன் காக்கும் இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார் வாசிம் பாரி. அவர் இந்து அல்ல மாறாக இஸ்லாமியர். அவர் சொந்த மதம் என்றும் பாராமல் தேசபற்றுடன் இருந்த ஒரே காரணத்துக்காக சுட்டு கொன்றிருக்கின்றனர். தேசபற்று என்பது மதத்தை தாண்டியிருக்க வேண்டும், அப்படி இருந்தவர்தான் கொல்லபட்ட வாசிம் பாரி

click me!