அதிமுகவின் முக்கியமான ரகசியத்தை போட்டுடைத்த அமைச்சர்...!! திகில் கிளப்பும் தகவல்கள்...!!

Published : Sep 03, 2019, 06:46 PM ISTUpdated : Sep 03, 2019, 06:47 PM IST
அதிமுகவின் முக்கியமான ரகசியத்தை போட்டுடைத்த அமைச்சர்...!!  திகில் கிளப்பும் தகவல்கள்...!!

சுருக்கம்

அதிமுகவை விழுங்க திமுக முயற்ச்சி செய்யவதாக கூறியவர் அது நடக்காது என்றார். என் என்றால்  திமுக திமிங்கலம் என்றால், அதனிடம் சிக்காத விலாங்கு மீன் அதிமுக என்றும் அவர் நகைச்சுவையாக பேசி சிரிக்கவைத்தார்.

திமுக திமிங்கலம் என்றால் அதனிடம் சிக்காத விலாங்கு மீன் அதிமுக என  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் இவ்வாறு பேட்டியளித்துள்ளார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர் அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான வார்த்தைப்போர் நடந்து வருகிறது, திமுக தலைவர் ஸ்டாலினை அமைச்சர்கள் நேரடியாக விமர்சிப்பதும் அமைச்சர்களை ஸ்டாலின் நேரடியாகவிமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை ஜோக்கர் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார், அதற்கு ஆமாம் நான் ஜோக்கர் தான்  ஜோக்கர் சிரிக்க வைப்பான், சிந்திக்க வைப்பான் ஆனால் ஸ்டாலின் சந்தி சிரிக்கவைப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருந்தார். 

இந்நிலையில், தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்துறை சார்பில், சென்னை  பாரிமுனையில் உள்ள குறளகத்தில் கொலு பொம்மை கண்காட்சியை மற்றும் விற்பனையை அமைச்சர்கள்  ஜெயக்குமார் தொடக்கி வைத்தனர். 

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுகவில் இருந்து வேண்டுமானால் சிலர் திமுகவுக்கு செல்லலாம் என்றும், ஆனால்  அதிமுகவில் இருந்து யாரும் திமுகவுக்கு செல்லமாட்டார்கள் என்றும் தெரிவித்தார். அதிமுகவை விழுங்க திமுக முயற்ச்சி செய்யவதாக கூறியவர் அது நடக்காது என்றார். என் என்றால்  திமுக திமிங்கலம் என்றால், அதனிடம் சிக்காத விலாங்கு மீன் அதிமுக என்றும் அவர் நகைச்சுவையாக பேசி சிரிக்கவைத்தார்.

PREV
click me!

Recommended Stories

3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?
திமுகவை சரமாரியாக விமர்சித்த ராமதாஸ்.. NDA பக்கம் வண்டியை திருப்பும் ஐயா? ட்விஸ்ட்!