ஓ.சி.சாப்பாடு திமுக... போதையில் உடன்பிறப்பின் உச்சகட்ட அராஜகம்..!

Published : Sep 03, 2019, 06:16 PM ISTUpdated : Sep 03, 2019, 06:22 PM IST
ஓ.சி.சாப்பாடு திமுக... போதையில் உடன்பிறப்பின் உச்சகட்ட அராஜகம்..!

சுருக்கம்

ஓசி பிரியாணி கேட்டு கிக் பாக்சிங், பியூட்டி பார்லரில் பெண்ணுக்கு உதை, செல்போன் கடையில் துவம்சம், வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநர் மீது சராமரி தாக்குதல் என தொடர்ந்து வந்த திமுக ரவுடிகளின் அட்டகாசம் சற்று ஓய்திருந்தது.  

இந்நிலையில், திமுகவினர் அராஜாகத்தில் ஈடுபடுவது மீண்டும் மெல்ல தலைதூக்கி வருகிறது. விழுப்புரம் தி.மு.க நகர செயலாளராக இருந்து வருபவர் சக்கரை. இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆனந்தாஸ் ஹோட்டலில் குடிபோதையில் தள்ளாடியபடியே உள்ளே நுழைந்தார். அப்போது, குடிபோதையில் தகாத வார்த்தைகளால் உளறிக் கொண்டிருந்தார். இவரது பேச்சு பக்கத்து டேபிளில் இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. 

இதனையடுத்து, சாப்பிட்டு விட்டு தள்ளாடிக்கொண்டே வந்தவரிடம், சாப்பிட்டதற்கு காசு கேட்டபோது கேசியரை நோக்கி அடிக்க பாய்ந்து வாய்க்கு வந்தபடி கடுமையான வார்த்தையால் திட்டித் தீர்த்துள்ளார். குடிபோதையில் திமுக பிரமுகர் செய்த அராஜகம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

முன்னதாக இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் ஐ.டி ஊழியரை கடத்தி, மிரட்டி, பணம் பறித்த தி.மு.க பிரமுகர் உள்பட 3 பேர் சேர்ந்த கும்பல் கைது செய்யப்பட்டது. எதிர்க்கட்சியில் இருக்கும் போதே இவ்வளவு ஆட்டம் போடும் திமுகவினர் ஆட்சி அதிகாரத்தில் வந்து விட்டால் பாதுகாப்பு என்பதே கேள்வி குறியாகிடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் முதல்வர்.. சத்தியாகிரகப் போராட்டம்.. அதிரடி!
'உங்க கனவ சொல்லுங்க'.. திமுக அரசின் புதிய திட்டம்.. வீடு தேடி வரும் தன்னார்வலர்கள்.. முழு விவரம்!