யார்தான் வேட்பாளர்..? - இழுத்தடிக்கப்படும் அதிமுக ஆட்சிமன்றக்குழுக் கூட்டம்...!

 
Published : Nov 28, 2017, 07:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
யார்தான் வேட்பாளர்..? - இழுத்தடிக்கப்படும் அதிமுக ஆட்சிமன்றக்குழுக் கூட்டம்...!

சுருக்கம்

A meeting of the AIADMK committee which was scheduled to take place in Royapettah in Chennai was postponed

சென்னை ராயப்பேட்டையில் நாளை நடைபெறுவதாக இருந்த அதிமுக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர் தேர்வு தாமதாமாகியுள்ளது.

இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்னர், அதிமுக.,வில் எடப்பாடி பழனிசாமிக்கும்  ஓ.பன்னீர்செல்வத்திற்கும் மவுசு கூடி விட்டது. 

இதையடுத்து டிடிவி தினகரன் அணியில் இருந்து 3 மாநிலங்களவை எம்.பி.க்களும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது விஜிலா சத்யானந்த் எம்.பி., இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கே நாங்கள் இருப்போம் என்று தெரிவித்தனர். 

அவர்களை தொடர்ந்து டிடிவி அணியில் இருந்து மேலும் இரண்டு எம்.பிக்கள் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.  

ஒபிஎஸ் இபிஎஸ் இணைந்த கையோடு இரட்டை இலையும் கிடைத்து விட்டது. அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை கிட்டியதும் டிடிவி பக்கம் இருந்த அதிமுகவினர் பதவிக்காகவோ அல்லது மன நிலைப்பாட்டுக்காகவோ எடப்பாடி பக்கம் சாய்ந்து வருகின்றனர். 

ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என டிடிவி தரப்பு கூறிவருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி தரப்பில் யார் வேட்பாளராக களமிறங்குகிறார் என உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. 

அதிமுக., ஆட்சி மன்றக் குழு கூடி இதனை தீர்மானம் செய்யும் என்று முடிவு எடுத்தார்கள். இந்த ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட இருப்பதால் இக்கூட்டதை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்