தொண்டர்களை கூட்டி அதிர வைத்த டி.டி.வி!! - கலங்கிப் போன எடப்பாடி,ஓபிஎஸ் அணிகள்!!

Asianet News Tamil  
Published : Aug 15, 2017, 09:50 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
தொண்டர்களை கூட்டி அதிர வைத்த டி.டி.வி!! - கலங்கிப் போன எடப்பாடி,ஓபிஎஸ் அணிகள்!!

சுருக்கம்

a massive crowd for ttv dinakaran

மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நடத்திய எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்துக்கு கூடிய தொண்டா்களின் கூட்டத்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் கலங்கிப் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் என அ.தி.மு.க.வினா் தனித்தனியாக நடத்தி வருகின்றனா். 

அந்த வகையில் டிடிவி தினகரன் தரப்பினர் நேற்று  மதுரையை அடுத்த மேலூரில்  எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை நடத்தினர். டிடிவி தினகரன் தலைமையில் நடத்தப்படும் முதல் பொதுக் கூட்டம் என்பதால் அரசியல் விமா்சகா்கள் இந்த கூட்டத்தை உன்னிப்புடன் எதிர் நோக்கி காத்திருந்தனா்.

பெரிய அளவில் கூட்டம் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. உளவுத்துறை கூட குறைந்த அளவு கூட்டம்தான் கூடும் என ரிபோர்ட் அளித்திருந்தது.

ஆனால் அவா்களின் எதிர்பார்ப்பை  தவிடு பொடியாக்கும் அளவிற்கு கூட்டம் திரண்டது. இதனால் எடப்பாடி தரப்பினா் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.  அரசு சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை விட நேற்று கூடிய கூட்டம் அதிகம் என்று தெரிகிறது.

மேலூரில் தினகரன் தலைமையில் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு 20 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.  மேலும் அந்த பகுதியில் இந்த எண்ணிக்கையில் தான் நாற்காலி அமைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தினகரன் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பே அந்த நாற்காலிகள் அனைத்தும் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தன.

டி.டி.வி தினகரன் பேசத் தொடங்கியது முதல் கூட்டம் வெகுவாக அதிகரிக்கத்  தொடங்கியது. இந்த கூட்டத்தை தினகரனே எதிர்பார்க்கவில்லை என்றும், இந்த கூட்டத்தை தக்க வைத்துக் கொள்ளவும், மேலும் அதிகப்படுத்தவும் தினகரன் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொண்டர்களின் சப்போர்ட்டுடன் டி.டி.வி.தினகரன் தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!