இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவு... சீறும் சீமான்..

Published : Jan 06, 2020, 06:14 PM ISTUpdated : Feb 10, 2020, 01:13 PM IST
இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவு... சீறும் சீமான்..

சுருக்கம்

 டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூக விரோதிகள், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்.

ஆளும் வர்க்கத்தால் நேரடியாக விடப்பட்டிருக்கிற கொலை மிரட்டல், அச்சுறுத்தல். தாக்குதலில் ஈடுபட்டக் கொடுங்கோலர்களை உடனடியாகக் கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சீமான் ஆவேசமாக கூறியுள்ளார். 

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியதாவது:- டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூக விரோதிகள், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்.

விடுதி கட்டண உயர்வு தொடங்கி குடியுரிமைச்சட்டத்திருத்தம் வரை அநீதிக்கெதிராகக் களத்தில் சமரசமற்று நிற்கும் மாணவப்பிள்ளைகளுக்கு ஆளும் வர்க்கத்தால் நேரடியாக விடப்பட்டிருக்கிற கொலை மிரட்டல், அச்சுறுத்தல். தாக்குதலில் ஈடுபட்டக் கொடுங்கோலர்களை உடனடியாகக் கடுஞ்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!