சினிமாக்காரன் ஒன்றும் முட்டாள் இல்லை..! அரசியல்வாதி ஒன்னும் பெரிய அறிவாளி இல்லை..! வெடித்துக் கிளம்பிய விஜய்..!

Published : Aug 21, 2025, 05:54 PM IST
TVK Leader Thalapathy Vijay Speech

சுருக்கம்

நான் இப்போது அரசியலுக்கு வர நன்றிக்கடன் தான் காரணம். 30 ஆண்டுகளா என்னை தாங்கி பிடிச்சு, அன்பையும், ஆதரவையும் கொடுத்துட்டு வர்றீங்க. நீங்க எனக்கு கடவுள் கொடுத்த வரம்.

மதுரை, பாரபத்தியில் தவெக 2வது மாநில மாநாடு இப்போது நடந்து வருகிறது. இம்மாநாட்டில் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர். 3:45 மணியளவில் மேடைக்கு வந்த விஜய்யை நிர்வாகிகள் கைகொடுத்து வரவேற்றனர். மேடையில் இருந்த சந்திரசேகர் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றனர். பிறகு தொண்டர்களை நோக்கி, விஜய் கையசைத்தும், கும்பிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேடையில் பேசிய விஜய், ‘‘பெண்குழந்தைகள், பெண்கள், முதியோர்களின் பாதுகாப்பில் முக்கியத்துவம் இளைஞர்கள், உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் இன்னும் யாருக்கெல்லாம் அரசின் தனிக்கவனம் தேவையோ அவர்கள் எல்லோருக்குமான அரசை அமைப்போம். உயிர் இல்லாதத கெட்டுப்போனத சிங்கம் தொட்டுக்கூட பாக்காது. நான் ஒண்ணும் Market போனதுக்கு அப்புறம் Retired ஆனதுக்கு அப்புறம் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரல, படைக்கலனோட வந்திருக்கோம்.

விரைவில் மக்களை சந்திப்பேன், அவர்களுடன் மனம் விட்டு பேசுவேன். அதன்பிறகு இந்த சாதாரண முழக்கம், இடி முழக்கமாக மாறி, தமிழ் நாட்டின் போர் முழக்கமாக மாறும். அந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்க விடாது! இந்த கூட்டம் ஓட்டல்ல, ஆட்சியாளர்களுக்கு வைக்கும் வேட்டு. நான் ஒண்ணும் Market போனதுக்கு அப்புறம் Retired ஆனதுக்கு அப்புறம் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரல, படைக்கலனோட வந்திருக்கோம்.மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, மேலூர், சோழவந்தான், திருப்பரங்குன்றம் என அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவேன். 234 தொகுதிகளிலும் களம் இறங்கும் ஒவ்வொரு தவெக வேட்பாளரும் விஜய் தான்.

இந்த மண்ணுக்கு வந்தவுடன், எனக்கு மனசுக்குள் ஓடியது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிய எண்ணங்கள் தான். சினிமாவுலயும், அரசியல்லயும் நமக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது யார்னா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான்... ஆனால், அவர் கூட பழகுறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கல. ஆனா அவர மாதிரியே குணம் கொண்ட என்னோட அண்ணன், புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்களோட பழகுறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது... அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவருதான். அவர மறக்க முடியுமா? நான் இப்போது அரசியலுக்கு வர நன்றிக்கடன் தான் காரணம். 30 ஆண்டுகளா என்னை தாங்கி பிடிச்சு, அன்பையும், ஆதரவையும் கொடுத்துட்டு வர்றீங்க. நீங்க எனக்கு கடவுள் கொடுத்த வரம்.

என்கூட நிற்குற மக்களை, நான் எப்படி மறப்பேன்? இதை பார்க்கும்போது எதிரிகளுக்கு எரியுது. மாநில உரிமை, பெண்ணுரிமை, சமூக நீதி, சமநீதி, மதச்சார்பின்மைக்காக உண்மையாக ஒலிக்குற குரல், தவெகவின் குரல். இன்னும் எத்தனை எத்தனை கூக்குரல்கள் வந்தாலும் ஓங்கி ஒலிக்குமே தவிர ஒரு நாளும் ஓயவே ஓயாது. நமது ஒரே கொள்கை எதிரி பாஜகதான்... ஒரே அரசியல் எதிரி திமுகதான். எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக இன்று எப்படி இருக்கிறது? அதிமுக கட்சியை யார் கட்டிக்காப்பது? பொருந்தாக் கூட்டணியாக அதிமுக-பாஜக கூட்டணி உள்ளது. நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் உறுதியாக பங்களிப்பு செய்யப்படும். 2026-ல் இருவருக்கு மத்தியில் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக.

ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவர் கபட நாடக மு.க.ஸ்டாலின் Uncle ஆக இருந்தாலும்... Uncle.. Uncle உங்களுக்கு மனசாட்சி இருந்தா.. நாங்க கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க...நீங்க நடத்துற ஆட்சியில நேர்மை இருக்கா... நியாயம் இருக்கா...? சினிமாக்காரன் ஒன்றும் முட்டாள் இல்லை. அரசியல்வாதி ஒன்னும் பெரிய  அறிவாளி  இல்லை’’ எனப் பேசினார் விஜய்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!