பால் வியாபாரத்திற்காக ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி.. இவ்வளவு விலையா..?

By Ezhilarasan BabuFirst Published Feb 15, 2021, 4:51 PM IST
Highlights

இந்நிலையில் சுமார் 30 கோடி செலவழித்து ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.ந தற்போது அந்த பகுதி முழுவதும் இவர் பேசுபொருளாகமாறி இருக்கிறார்.

பால் வியாபாரம் செய்வதற்காக விவசாயி ஒருவர் சுமார் 30 கோடி ரூபாய் செலவழித்து ஹெலிகாப்டர் வாங்கியிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் இச் சுவாரஸ்யம் மிகுந்த சம்பவம் நடந்துள்ளது. விவசாயிகள் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அவர்களின் ஏழ்மையும், இயலாமையும்தான், பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒரு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு போராடும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பால் வியாபாரி ஒருவர் 30 கோடி செலவழித்து ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் போயர், இவர் விவசாயம் மற்றும் பால் வியாபாரியாகவும் இருந்து வருகிறார். 

பால் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி வெளியூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதால் தனக்கென ஒரு ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்தார். இவருக்கு பால் வியாபாரம் மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலும் அத்துப்படி என்பதால் இவர் பஞ்சாப், குஜராத், அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது, இந்நிலையில் சுமார் 30 கோடி செலவழித்து ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.ந தற்போது அந்த பகுதி முழுவதும் இவர் பேசுபொருளாகமாறி இருக்கிறார். ஜனார்த்தன் போயர், தனது வீட்டின் அருகே ஹெலிகாப்டருக்காக ஹெலிபேட் கட்டியுள்ளார். மேலும் பைலட் அறை, தொழில்நுட்ப அறை ஆகியவையும் தயார் செய்யப்பட்டுள்ளன. 

மார்ச் 15ஆம் தேதி ஹெலிகாப்டர் இவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது, தனக்கு 2.5 ஏக்கர் பரப்பளவில் நிலம் இருப்பதால் அங்கே ஹெலிபேட், பார் உள்ளிட்ட பல்வேறு வசிதகளை உருவாக்கிக் கொள்ளஉள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பியாண்டி என்பது முக்கிய தொழிலதிபர்களை கொண்ட பகுதியாக உள்ளது, இங்கு நாட்டில் விலை உயர்ந்த வாகனங்கள் மற்றும் குடோன்கள் இருப்பதால் இது செல்வ செழிப்பு மிகுந்த பகுதியாக கருதப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் காடிலாக் கார்  முதல் முதலில்  பிவாண்டி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஜனார்த்தனன் தற்போது தனது பால் வியாபாரத்திற்காக ஹெலிகாப்டர் வாங்கியிருக்கிறார்.  ஜனார்த்தனனுக்கும் பிவாண்டி பகுதியில் பல குடோன்கள் வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

click me!