பாஜகவில் இணைந்த பிரபல நடிகை..! சொதப்பல் பதில் கொடுத்து நைசா நகர்ந்த சுவாரஸ்யம்..!

Published : Jun 06, 2019, 03:37 PM IST
பாஜகவில் இணைந்த பிரபல நடிகை..! சொதப்பல் பதில் கொடுத்து  நைசா நகர்ந்த சுவாரஸ்யம்..!

சுருக்கம்

பிரபல வங்கதேச நடிகையான அஞ்சு கோஷ் என்பவர் பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். வங்க தேசத்தின் தலைநகரான டாக்காவில் வசித்து வருபவர்.

பாஜகவில் இணைந்த பிரபல நடிகை..! 

பிரபல வங்கதேச நடிகையான அஞ்சு கோஷ் என்பவர் பாஜகவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். வங்க தேசத்தின் தலைநகரான டாக்காவில் வசித்து வருபவர். இவர்.அங்குள்ள பஹான்கா என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்து தனக்கென தனி அங்கீகாரத்தை தட்டிச் சென்றவர் இந்த நடிகை. இவர் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்று குடியேறிய இவர், தற்போது மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "வங்கதேசத்தைச் சேர்ந்தவர் நீங்கள் பாஜகவில் இணைந்து உள்ளீர்களே ? குடியுரிமை பெற்று விட்டீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதில் ஏதும் தெரிவிக்காமல், சொதப்பல் பதில் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!