முதல்வரை அவதூறாக பேசுவதா - நாஞ்சில் சம்பத் மீது குவியும் வழக்குப்பதிவு...!

 
Published : Oct 25, 2017, 06:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
முதல்வரை அவதூறாக பேசுவதா - நாஞ்சில் சம்பத் மீது குவியும் வழக்குப்பதிவு...!

சுருக்கம்

A complaint was filed against Chief Minister Edappadi Palanisamy on the complaint of Nanjil Sampat.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருவாரூரில் அதிமுக தினகரன் அணி சார்பில் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை நாஞ்சில் சம்பத் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவாரூர் காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் மூர்த்தி புகார் தெரிவித்திருந்தார். 

அந்த புகார் மனுவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத், மற்றும் நீடாமங்கலம் சங்கர், இளவரசி இளையராஜா, இருள்நீக்கி சேகர் ஆகிய 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 

இதுகுறித்து திருவாரூர் போலீசார், நாஞ்சில் சம்பத் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!