கொடிக்கம்பம் விழுந்ததில் சல்லி சல்லியான கார்... தவெக தேடிக்கொண்ட உடனடி பரிகாரம்..!

Published : Aug 20, 2025, 04:22 PM IST
TvK Flag

சுருக்கம்

தவெக மதுரை மாநாட்டுத் திடலில் 100 அடி கொடிக் கம்பம் நடும்போது கீழே விழுந்து பெரும் விபத்து. கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்தஇடமே போர்களம் போல காட்சியளித்தது. இதற்கு தவெக உடனடி பரிகாரம் டேடிக் கொண்டுள்ளது

 

தவெக மதுரை மாநாட்டுத் திடலில் 100 அடி கொடிக் கம்பம் நடும்போது கீழே விழுந்து பெரும் விபத்து. கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்தஇடமே போர்களம் போல காட்சியளித்தது. இதற்கு தவெக உடனடி பரிகாரம் டேடிக் கொண்டுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு நாளை மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாளை பிற்பகல் 3.15மணிக்கு தொடங்கி இரவு 7.25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக மாநாட்டில் பங்கேற்க, விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா மதுரைக்கு வந்துந்துள்ளனர்.

“வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டு வாயில் பகுதியில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இந்த கொடிக்கம்பத்தை ராட்சத கிரேன் மூலம் நிறுத்தும் பணி இன்று நடைபெற்றது. கொடிக்கம்பம் நடப்பட்டு சில நிமிடத்திற்குள் எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்தது. இதில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தவெக நிர்வாகியின் கார் மீது கொடிக்கம்பம் சரிந்தது. கார் முழுவதும் சேதமடைந்தது. 100 அடி கொடிக்கம்பமும் சேதமடைந்துள்ளது. நல்வாய்ப்பாக அப்பகுதியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தரைமட்டத்திலிருந்த பில்லருக்கும், அதன் மேல் நிறுத்தப்பட்ட கம்பத்துக்கும் முதலில் இரண்டு போல்டுகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. அடுத்தடுத்து போல்டுகள் போடுவதற்குள் பேலன்ஸ் தாங்காமல் கம்பம் சாய்ந்துள்ளது. சிறிய ரக கிரேன் பயன்படுத்தப்பட்டதும் விபத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கம்பம் நிறுவ பயன்படுத்தப்பட்ட கயிறும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சாய்ந்த கம்பத்தை அகற்றும் பணிகளும் தற்போது தொடங்கி உள்ளது. விபத்து நடந்த இடத்தில் திருமங்கலம் ஏஎஸ்பி அன்சூல் நாகூர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிக எடை கொண்ட கம்பம் என்பதால் காலையில் இருந்து யாரையும் நாங்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதைமீறி சிலர் உள்ளே வந்தனர். இந்த கம்பத்துக்கு மாற்று ஏற்பாடு என்னவென்று விஜய்யிடம் கேட்டு பொதுச்செயலாளர் முடிவு செய்வார். இது ஒரு சின்ன விபத்து. தவெக தலைவர் விஜய் மாநாட்டுக்காக வரும் மக்களுக்காக அத்தனை வசதிகளையும் பார்த்து பார்த்து செய்ய சொல்லியிருக்கிறார். 8000 மீட்டர் நீளத்துக்கு தண்ணீர் பைப் போடப்பட்டுள்ளது. எந்தவொரு இடையூறும் மக்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு பெரிய இடம் தேர்வு செய்யப்பட்டது. 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்” என்றார்.

இதுகுறித்து விபத்தில் சல்லி சல்லியான கார் உரிமையாளர் தினேஷ்குமார் கூறுகையில், ‘‘விபத்து நிகழும் சில நிமிடங்களுக்கு முன்பு வரை காரில் தான் இருந்தேன். தண்ணீர் குடிக்க சென்ற நேரத்தில் காரின் மீது கொடி கம்பம் விழுந்துள்ளது’’ எனக்கூறினார். தவெகவின் 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து அப்பளம் போல நொறுங்கிய இன்னோவா காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில், ‘‘நம் மாநாட்டில் கொடி கம்பம் வைத்தவர்கள் பல கட்சிகளுக்கு கொடி கம்பம் அமைத்து கொடுப்பவர்கள் தான். கட்சியினர் யாரும் வேலையில் ஈடுபடவில்லை. இதற்கு தவெக-வ குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் திமுகவினர். அவர்கள் குறைசொல்வதை நிறுத்த வேண்டும்’’ என தவெகவினர் கூறி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?