கமல்ஹாசன், ஜி.கே.வாசன் உட்பட 9 கட்சிகளுடன் புது கூட்டணி !! காங்கிரசுக்கு 6 தொகுதி… 40 தொகுதிகளையும் அள்ள ஸ்டாலின் அதிரடி திட்டம் !!

By Selvanayagam PFirst Published Sep 30, 2018, 8:18 AM IST
Highlights

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவில் ஏற்கனவே உள்ள 7 கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியையும், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் இணைத்து புதிய கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சு வார்த்தை தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் தமிகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிகாரமற்ற முறையில் நடைபெற்று வருகின்றன.. கடந்த, 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்  தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட்டு, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் இநத முறை வெற்றிக் கனியைப் பெறும் வகையில் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு விவகாரங்களை முடித்து, தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட வேண்டும் என, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்  தேர்தலை பொறுத்தவரையில், தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால்தான் வாக்குகளை பெற முடியும் என்ற நிலை காலகாலமாக இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட, தி.மு.க., தயாராகி விட்டது.

கடந்த வாரம் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த, , ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்' என, உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள ராகுல்காந்தி,.தி.மு.க., தலைமையிலானகூட்டணியில், காங்கிரசுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பதும், ராகுலிடம், ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  ஸ்ரீபெரும்புதுார், சேலம், ராமநாதபுரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், புதுச்சேரி உட்பட, ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.ஒன்பது கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது, தமிழகத்திலிருந்து, 40 தொகுதிகள் ஒட்டுமொத்தமாக கிடைக்க வாய்ப்பு இருப்பதால்,காங்கிரசுக்கு, ஆறு தொகுதிகள் பெறுவதில், ராகுல் தரப்பில், எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதேபோல, வாசன் தலைமையிலான, த.மா.கா.,விற்கு, மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய, இரு லோக்சபா தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுவதற்காக, தென் சென்னையை ஒதுக்கலாம் என,ஸ்டாலின் விரும்புகிறார்.இதற்காக அவருடன் உள்ள கருத்து வேறுபாட்டையும் மறந்து, ஒரு தொகுதி வழங்க, தி.மு.க., தயாராக உள்ளது.


ம.தி.மு.க.,வுக்கு, ஈரோடு, விருதுநகர் என, இரு தொகுதிகளும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, தலா, இரு தொகுதிகள் என, தென்காசி, கோவை, நாகப்பட்டினம், பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சிதம்பரம் தொகுதியும், முஸ்லிம் லீக் கட்சிக்கு, திருச்சியும் என, எட்டு கட்சிகளுக்கும், 17 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து விட்டு, 23 தொகுதி களில், தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது திரைமறைவில் நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சு, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பின், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

click me!