மாநிலங்களவை தேர்தல்... வேட்புமனுவை திரும்பப் பெறும் நேரம் நிறைவு... தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றி தேர்வு!!

Published : Jun 03, 2022, 04:37 PM IST
மாநிலங்களவை தேர்தல்... வேட்புமனுவை திரும்பப் பெறும் நேரம் நிறைவு...  தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றி தேர்வு!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உட்பட மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவி விரைவில் காலியாக இருந்தது. இதை அடுத்து புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. தற்போது தமிழக சட்டசபை உள்ள உறுப்பினர்களை வைத்துப் பார்க்கும்போது, காலியாகும் 6 இடங்களில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் செல்லும். இதில் திமுக 3 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் சுயேட்சைகளும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதை அடுத்து அந்தந்த கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர். இதை அடுத்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி வேட்பு மனு பரீசீலனை நடைபெற்றது. இதில் 7 சுயேட்சைகள் மனுகள் நிராகரிக்கப்பட்டது. மேலும் வேட்பு மனுக்களை திரும்பறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3 (இன்று) என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் இன்று பிற்பகல் 3 மணியோடு வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்தது.

இந்த நிலையில், 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 பேரை தவிர மற்றவர்கள் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்படாததால் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனிடையே திமுகவை சோ்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதி, கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், அதிமுகவைச் சோ்ந்த எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமாா் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  இந்த நிலையில் தமிழகத்தில் 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி