துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். இதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். பின்னர், விழாவில் பேசிய ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி 6 மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக தேசிய செயலாளர் எச்.ராஜா குரல் கொடுத்துள்ளார்.
துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். இதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். பின்னர், விழாவில் பேசிய ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் பேசினார். மேலும், முரசொலியை வைத்திருந்தால் திமுகவினர் என்றும், துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலினையும் கடுபேற்றினார்.
இந்த தகவல் முற்றிலுமாக தவறானது என ரஜினிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினியின் இந்த பேச்சு அமைதியை குலைக்கும் விதமாக இருப்பதாக கூறி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ரஜினிக்கு எதிராக சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை வாங்கி வைக்காமல் உடனே வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் 43-வது புத்தக கண்காட்சியை பார்வையிட்ட எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மேற்கோள் காட்டியது, ஒரு சின்ன பகுதி மட்டுமே எனவும், இதில் தவறாக எதுவும் அவர் பேசவில்லை எனவும் கூறினார். உள்நோக்கத்துடன் அவரை பாஜகவின் பிம்பம் என்று சித்தரிக்கவே இந்த புகார்கள் தரப்பட்டுள்ளன. ஒரு சிலர் விடுக்கும் மிரட்டலுக்கு ரஜினி அஞ்சமாட்டார் எனவும் எச்.ராஜா தெரிவித்தார். மறுபுறம் முரசொலி தொடர்பாக விமர்சித்த ரஜினிக்கு திமுக பதிலடி கொடுத்து வருகிறது.