யார் எதிர்த்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது !! 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தியே தீருவோம் !! செங்கோட்யைன் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Nov 28, 2019, 8:49 AM IST
Highlights

5, 8–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும், அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் தான் இருக்கும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன்  அதிரடியாக தெரிவித்தார்.
 

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் விளையாட்டில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ரூ.76 கோடியே 42 லட்சம் மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.  

அரசு பள்ளியில் உள்ள கம்ப்யூட்டர்கள் ஆசிரியர்களின் சேலையால் மூடி வைக்கப்பட்டுள்ளது. அதை நான் பார்த்து இருக்கிறேன். விரைவில் தகவல் தொழில் நுட்பத்துறை மூலம் ரூ.2,400 கோடி செலவில் அனைத்து பள்ளிகளுக்கும் ‘இன்டர்நெட் வசதி’ வழங்கப்பட உள்ளது. இதனால் அந்த கம்ப்யூட்டர்களை உடனடியாக சரிசெய்து உபயோகத்துக்கு கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியான‘ளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும். 5–ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கும், 8–ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் என அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் கேட்கப்படும். 

எளிதாகவே வினாக்கள் இருக்கும். கல்வித்திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு நடக்கும். பள்ளிக்கல்வி துறையில் நிர்வாக பணிகளுக்கு ஆட்கள் குறைவாகவே உள்ளனர். இந்த காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்த எதிர்கட்சிகளும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் செங்கோட்யைன் இப்படி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!