500 கோடி பணமும், அமைச்சர் பதவியும்... ஆப்ரேஷன் கமல் ‘ஆபரேஷன் கை’? சூடுபிடித்த கடைசி நேர பேரம்

Asianet News Tamil  
Published : May 19, 2018, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
500 கோடி பணமும், அமைச்சர் பதவியும்...  ஆப்ரேஷன் கமல் ‘ஆபரேஷன் கை’? சூடுபிடித்த கடைசி நேர பேரம்

சுருக்கம்

500 crore cash and Ministerial position Operation Kamal

கர்நாடகாவில் தற்போது நொடிக்கு நொடி அரசியல் நிலை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் ஆப்ரேஷன் கமல்” தொடங்கிவிட்டனர். பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக தலைவர்கள் கடைசி நேர பேரத்தில் குதித்துள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெருபான்மையை நிருபிக்கும்படி எடியூரப்பாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை பிடிக்கவும் பாஜ-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கர்நாடகாவில் கடந்த 2008 ம் ஆண்டு பாஜக சார்பில் ‘ஆபரேஷன் கமல்’ என்னும் நடவடிக்கை அதாவது, எம்.எல்.ஏக்களை பாஜக பக்கம் கமல் - தாமரை இழுக்கும் திட்டம். இப்போதும் ஆபரேஷன் கமலைப் பயன்படுத்தி காங்கிரஸ் மஜத எம்.எல்.ஏக்களை பாஜகவுக்கு இழுக்கும் பணிகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியானது.

முந்தைய ஆபரேஷன் கமலில் பெரும்பங்காற்றிய ஜனார்த்தன ரெட்டி தலைமையில் இந்த முறையும் களத்தில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் தரப்பில் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாகக் கூறப்படும் எம்.எல்.ஏக்கள் ஆனந்த் சிங் மற்றும் நாகேந்திரா ஆகிய இருவருமே ஜனார்த்தன ரெட்டியுடன் நீண்ட நாள்கள் தொடர்பில் உள்ளவர்கள்.

சுரங்க ஊழலில் ஜனார்த்தன ரெட்டிக்கு இருவரும் உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமானவரான பாஜக எம்.எல்.ஏ ஸ்ரீராமுலு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைத் தொடர்புகொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, முருகேஷ் நிரானி ஆகியோர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அதேநேரத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்கள் போனில் வரும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் புதிய ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டுமென்று அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டது. ஜனார்த்தன ரெட்டி மூலம் எம்.எல்.ஏக்களை இழுப்பதாக ஒருபுறம் கூறப்படும் நிலையில், அமலாக்கத் துறை மூலம் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களை வளைக்கவும் பாஜக முயற்சி செய்து வருவதாக மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது காங்கிரஸ் கட்சியிலுள்ள 16 அதிருப்தி   எம்எல்ஏக்களை குறி வைத்தே பாஜக தனது பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் ‘ஆபரேஷன் கை’ என்ற திட்டத்தை அரங்கேற்ற முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் பாஜக எம்எல்ஏக்கள் 20 பேரை இழுக்க வியூகம் அமைத்துள்ளனர். 

ஆபரேஷன் கை திட்டம் மூலம் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாக்கும் பொறுப்பும், பாஜ எல்எல்ஏ களை இழுக்கும் பொறுப்பை டி.கே.சிவகுமாரிடம் கொடுத்துள்ளதாம்.

இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் பாஜ காங் இடையே எம்.எல்.ஏக்களை இழுக்கும் போராட்டமும், தற்போது இருக்கும் எம்.எல்.ஏக்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ள போராட்டமும் நடந்து வருகிறது.

“ஆபரேஷன் கை” வியுகத்தில் பிஜேபியிலிருந்து வரும் எம்.எல்.ஏகளுக்கு அமைச்சர் பதவியோடு பல கோடிகள் கொடுப்பதாக இருக்கிறார்களாம். காங்கிரசிலிருந்து பாஜகவிற்கு வரும் முதல் 10 எம்.எல்.ஏ.களுக்கு 1௦௦௦  கோடி பணமும், அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட இருக்கிறார்களாம்.

முதல் கட்டமாக சுயேச்சையாக வென்ற சங்கர், நாகேஷ் ஆகிய இருவரையும் பாஜகவிடமிருந்து காங்கிரஸுக்கு இழுத்துள்ளார்.  அதேபோல தற்போது லிங்காயத் வகுப்பைச் சேர்ந்த எடியூரப்பா, ஒக்கலிகர்களை ஏமாற்றி வருவதாகக் கூறி, அந்த சமூகத்தைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்களை இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் உறுதி செய்துள்ளார். இது குறித்து நிருபர்களிடம் பேசுகையில் “பாஜகவைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு வருவதாக உறுதியளித்திருக்கிறார்கள்” என்றார். மேலும் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீலும் “ லிங்காயத் சமூதாயத்தை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் விரைவில் இணைய உள்ளனர். அவர்களுக்கு அங்கு இருப்பது பிடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கார்நாடாகாவில் தற்போது நொடிக்கு நொடி அரசியல் நிலை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் ஆப்ரேஷன்  கமல் & கை வியூகத்தில் சிக்கப்போவது யார்? இன்று மாலை சட்டசபையில் நடக்கும் பலப்பரிச்சையில் ரிசல்ட் தெரிந்துவிடும்.

PREV
click me!

Recommended Stories

முதலமைச்சர் டூ MP.. ரிவர்ஸ் கியர் போடும் நிதிஷ் குமார்.. அழுத்தம் கொடுக்கும் பாஜக..?
திமுகவில் சர்ப்ரைஸ்.. அதிமுகவில் பாமகவுக்கு வாய்ப்பு.. ராஜ்ய சபா வேட்பாளர்கள் லிஸ்ட் இதோ!