திருச்சி மாநகராட்சியில் முட்டி மோதி காங்கிரஸ் வாங்கிய 5 வார்டுகள்.. கமுக்கமாக மனுதாக்கல் செய்த கதர்ச்சட்டைகள்!

Published : Feb 04, 2022, 08:42 PM IST
திருச்சி மாநகராட்சியில் முட்டி மோதி காங்கிரஸ் வாங்கிய 5 வார்டுகள்.. கமுக்கமாக மனுதாக்கல் செய்த கதர்ச்சட்டைகள்!

சுருக்கம்

திருச்சி மாநகராட்சி தேர்தலில் திமுக 51 வார்டுகளில் போட்டியிடுவது இறுதியானது. மதிமுக 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும் போட்டியிடுவது இறுதியானது.

திருச்சி மாநகராட்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் வரை காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை.  வேட்பாளர்கள் பெயரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நாளில் 5 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. திமுக கூட்டணி சார்பில் வார்டு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபோது, காங்கிரஸ் கட்சி 10 வார்டுகளைக் கேட்டது. ஆனால், 4 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். கட்சிக்காக உழைத்தவர்கள் தேர்தலில் போட்டியிட அதிக வார்டுகளைப் பெற வேண்டும் என்று காங்கிரஸார் கொந்தளித்தனர். இதை வலியுறுத்தி பெண் நிர்வாகி ஒருவர் கட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல பிற நிர்வாகிகள் கட்சியின் மாவட்ட அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.

 

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி தேர்தலில் திமுக 51 வார்டுகளில் போட்டியிடுவது இறுதியானது. மதிமுக 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும் போட்டியிடுவது இறுதியானது. விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி தலா ஒரு வார்டில் போட்டியிடுவதும் முடிவானது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை வார்டுகள் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்தபோதும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதனால், காங்கிரஸார் சிலர் சுயேட்சையாகப் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து குழப்பம் நிலவியது. இந்தக் குழப்பத்துக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜவஹர், சோபியா விமலராணி,  சுஜாதா, ரெக்ஸ், கோவிந்தராஜன் ஆகியோர் போட்டியிட திடீரென வேட்புமனு தாக்கல் செய்தனர். அதாவது, 5 வார்டுகளில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதுகுறித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், “வேட்புமனு தாக்கல் செய்யும்படி 5 பேருக்கு தனிப்பட்ட முறையில் கட்சித் தலைமை உத்தரவிட்டது. அதனால், இன்று வேட்புமனு தாக்கல் செய்தோம்” என்று தெரிவித்தன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!