
குடியரசுத்தலைவர் வேட்பாளராக தமிழசை சௌந்தராஜன் நிறுத்தப்பட்டாலும் ஆதரிக்க முடியாது என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்த கொண்டுள்ள விசிக கட்சியின் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் 2022 ஜூலை 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 5 மாதங்களுக்குப் பின் ஜனாதிபதிக்கான தேர்தல் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக குடியரசுத்தலைவர் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து பேச்சு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்சிக்குள் அடிபடுவதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்குப் பின் அதற்கான தேர்வு பணிகள் தீவிரம் அடையும் என கூறப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளரை பொருத்தவரையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே 4 பெயர்கள் அடிபடுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. உத்திரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கர்நாடக கவர்னர் தாவர் சந்த் கெளாட், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் தெலங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பெயரில் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக தமிழசை சௌந்தராஜன் நிறுத்தப்பட்டாலும் ஆதரிக்க முடியாது என விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார் . பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்த கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜூலை மாதம் நடைபெறவுள்ள குடியரசுத்தலைவர் தேர்தலில் "தமிழர்" ஒருவரை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முயற்சியெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
முன்பு தமிழர் ஒருவருக்கு வாய்ப்பு இருந்தபோதும் பெண் ஒருவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பதால் பிரதிபா பாட்டீல் குடியரசுத்தலைவர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்ட போது கலைஞர் கருணாநிதி ஆதரவு அளித்தார். அதேபோல தி.மு.க.வுக்கு மீண்டும் இம்முறை ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சிக்கு 2017ம் ஆண்டை போல் இப்போது பெரும்பான்மை இல்லை; இப்போது நடைபெறவுள்ள 5 மாநில தேர்தலோடு சேர்த்து பாஜக.வின் பலம் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு 75 மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்வு நடைபெறவுள்ளது, அதிலும் பாஜக கணிசமாக உறுப்பினர்களை இழக்கும் என்பதால் இதனை பயன்படுத்தி கொண்டு தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும்.
நீண்ட காலமாக தமிழர்கள் குடியரசுத்தலைவர் பதவியில் இடம்பெறவில்லை. ஏனெனில் தமிழகம் என்பது மாநிலம் மட்டுமல்ல, இந்தியாவுக்கு வழிகாட்டிய நிலப்பரப்பு ஆகும். அனைவரையும் சம மரியாதையோடு நடத்த ஒரு குடியரசுத்தலைவர் வேண்டும் என்றால் தமிழர் ஒருவரை குடியரசுத்தலைவராக முன்னிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாடு இக்கட்டான சூழலில் உள்ள போது மத அடிப்படையில் கருத்தியல் ரீதியாக ஒன்றுபட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக முன்னிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க கூடாது எனவும், ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட எவரும் குடியரசுத்தலைவராக, குடியலணு துணைத்தலைவராக வராமல் தடுக்க வேண்டும் எனவும் கூறினார்.