5முறை குண்டர் சட்டம் பாய்ந்தவருக்கு பாஜகவில் பதவியா? டெல்லிக்கு பறக்கும் புகார் கடிதங்கள்.!

By T BalamurukanFirst Published Jul 27, 2020, 9:47 AM IST
Highlights

5முறை குண்டர் சட்டத்தில் கைதானவருக்கு பாஜகவில் பதவி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அதிருப்தியடைந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லிக்கு புகார் கடிதம் அனுப்பி வருகிறார்கள்.
 


5முறை குண்டர் சட்டத்தில் கைதானவருக்கு பாஜகவில் பதவி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அதிருப்தியடைந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லிக்கு புகார் கடிதம் அனுப்பி வருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி முரளி என்கிற முரளிதரனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து டெல்லிக்கு புகார் கடிதம் அனுப்பி வருகிறார்கள் சேலம் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.

2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தேர்தல் வேலைகள் தமிழகத்தில் தொடங்கி இருக்கிறது பாஜக.அதற்கான பணிகளில் மாநிலத் தலைவர் முருகன் ஈடுபட்டு வருகிறார்.திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை பாஜக பக்கம் இழுப்பதும்.பாஜக பக்கம் இருக்கும் நிர்வாகிகளை திமுக பக்கம் இழுப்பதுமான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கட்டுக்கட்டாக செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் வசமாக சிக்கிய பாஜகவைச் சேர்ந்த அருண் அந்த சமயத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.5 முறை குண்டர் சட்டத்தில் கைதானவருக்கு பா.ஜ.கவில்  மாவட்ட இளைஞரணி பதவி வழங்கப்பட்டுள்ளது.தற்போது, அதே கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக அண்மையில் பதவியேற்றுள்ளார். அதேபோல, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி முரளி பல்வேறு கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை புரிந்து 5 முறை குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டவர்.


அந்த ரவுடிக்கு தற்போது சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரவுடிகள், மோசடி பேர்வழிகளை கட்சியில் இணைத்து மக்களிடையே தன் செல்வாக்கை வெளிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறான இழி செயல்களில் ஈடுபட்டு தன் கட்சி உறுப்பினர்களிடையேவும் தமிழக பாஜக கெட்ட பெயர்களை ஈட்டி வருகிறது என்று புகார் கடிதம் டெல்லிக்கு பறந்து கொண்டிருக்கிறதாம்.

click me!