ஜெயலலிதா 'கை நாட்டு' பெற்ற டாக்டருக்கு ரூ.5 லட்சம்: விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணத்தில் ஆதாரம்!

 
Published : Apr 09, 2017, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
ஜெயலலிதா 'கை நாட்டு' பெற்ற டாக்டருக்கு ரூ.5 லட்சம்: விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணத்தில் ஆதாரம்!

சுருக்கம்

Highlighted 5lacs given to Dr.Balaji for approving thumb impression given by Hon.Amma. Dr.Vijayabhaskar paid for it

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளை போட்டியிடும், வேட்பாளர்களுக்கான "பி" படிவத்தில் ஜெயலலிதாவின் கை நாட்டு பெறப்பட்டது.

அவ்வாறு கைநாட்டு  பெறுவதற்கு உதவிய டாக்டர் பாலாஜிக்கு  5 லட்ச ரூபாய் நன்கொடை  கொடுத்ததற்கான ஆவணங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில், வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், ஆர்.கே.நகரில் பண பட்டுவாடா செய்வதற்கான ஆதாரங்கள், மற்றும் அமைச்சர்களின் ஸ்பான்சர் பட்டியல் ஆகியவை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், தஞ்சாவூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில், போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு, மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவின் கை நாட்டு பெற்று தந்தவர் டாக்டர் பாலாஜி. அவருக்கு அன்பளிப்பாக, 5 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகி பரபரப்பை மேலும் கூட்டி உள்ளது.

அதை கொடுத்தவர், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். அவரது வீட்டில் நடந்த வருமானவரி துறை சோதனையின் போது, இந்த ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டு, அது சில ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது.

அந்த பட்டியலில், மேலும் சில வரவு-செலவு கணக்குகள் இடம்பெற்றுள்ளன. எனவே, ஆர்.கே.நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை சூடு பிடித்து, அதிலும் பலர் சிக்குவார்கள் என்று என்று கூறப்படும் தகவலால், சசிகலா தரப்பினருக்கு வயிற்றில் புளியை கரைத்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!