தமிழகத்திற்கு வந்த 5 லட்சம் கோவிஷூல்டு தடுப்பூசிகள்.. மீண்டும் தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

By Ezhilarasan BabuFirst Published Jul 21, 2021, 10:27 AM IST
Highlights

குறிப்பாக சென்னைக்கு மட்டும் 36,500 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 75, 500 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் தமிழகத்திற்கு 5 லட்சம் கோவிஷூல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது.  அதனை அனைத்து மாவட்டத்திற்கும் தேவைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.

 

குறிப்பாக சென்னைக்கு மட்டும் 36,500 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 75, 500 கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 64000 கோவிஷூல்டு தடுப்பூசிகளும், சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு 60,000 கோவிஷூல்டு தடுப்பூசிகளும், 

திருச்சி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 53000 கோவிஷூல்டு தடுப்பூசிகள் என மொத்தமாக வந்த ஐந்து லட்சம் தடுப்பூசிகளையும் 45 மாவட்டங்களுக்கு தேவைக்கேற்றவாறு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் மீண்டும் சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இருக்கிறது அதே போல அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பூசிகள் சென்றுள்ள நிலையில் அங்கும் தடுப்பூசிகள் போடும் பணி மீண்டும் தொடங்குகிறது. 
 

click me!