சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்… அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!! | CMStalin

By Narendran SFirst Published Nov 23, 2021, 10:03 PM IST
Highlights

#CMStalin | சேலத்தில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாநகர் கருங்கல்பட்டி பாண்டுரங்க நாதர் விட்டல் தெருவில் வசித்து வருபவர் கணேசன். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அதே போன்று கோபி என்பவர் எலக்ட்ரிஷன் ஆக பணியாற்றி வருகிறார். இருவரது வீடுகளும் அருகருகே  உள்ள நிலையில் இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் இவர்கள் வீட்டில் சிலிண்டர் பயங்கர சத்ததுடன் வெடித்து. இந்த விபத்தில் இரண்டு மாடி வீடுகள் இடிந்து விழுந்தன.

அருகில் இருந்த சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 13 பேரை அடுத்தடுத்து மீட்டு,  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மூதாட்டி ராஜலட்சுமி என்பவர் இடிபாடுகளில் சிக்கி முதலில்  உயிரிழந்தார். மேலும் கோபி என்பவர்,  90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார். மற்றவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 7 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த பத்மநாபன் மற்றும் அவருடைய மனைவி தேவியின் உடல்கள் மீட்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கார்த்திக் ராம் என்ற இளைஞரின்  உடலை தீயணைப்புதுறை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் ராஜலட்சுமியின் வீட்டில் தங்கியிருந்த அவருடைய நாத்தனார் எல்லம்மாள் உடலை மீட்டனர். இதனால் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

click me!