தலைமை செயலாளர் இறையன்பு செய்த அதிரடி… வெளியானது அறிவிப்பு

Published : Sep 22, 2021, 08:11 PM IST
தலைமை செயலாளர் இறையன்பு செய்த அதிரடி… வெளியானது அறிவிப்பு

சுருக்கம்

5 முக்கிய ஐஏஸ் அதிகாரிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பணியிடம் மாற்றம் செய்துள்ளார்.

சென்னை: 5 முக்கிய ஐஏஸ் அதிகாரிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பணியிடம் மாற்றம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கலை, கலாசாரத்துறை ஆணையர் கலையரசி பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்பு செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஈரோடு துணை ஆட்சியர் ப்ரதிக் தயாள், அரசு நிதித்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரிய கூடுதல் மேலாண் இயக்குநராக பிரதீப் குமார், ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியராக மதுபாலன் ஆகியோர் மாற்றப்பட்டு உள்ளனர். பத்மநாபுரம் துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் சென்னை பெருநகர மாநகராட்சி வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற பிரிவின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகருக்கு அரசு சிறப்பு திட்ட செயலாக்கதுறைய இணை செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது என்று அவரது அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

PREV
click me!

Recommended Stories

மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!
என்னையா முடக்க பாக்குறீங்க.. அதுஒருபோதும் நடக்காது.. திமுக அரசை அட்டாக் செய்து விஜய் ட்வீட்!