#BREAKING முதல்வராக பதவியேற்றதும் அதிரடி காட்டிய மு.க.ஸ்டாலின்.. முதலில் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகள்..!

By vinoth kumarFirst Published May 7, 2021, 1:03 PM IST
Highlights

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 முதல்கட்டமாக இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். 

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 முதல்கட்டமாக இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். 

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்திய பின் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர்,  தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் இருக்கையில் அமர்ந்த மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டர்.

1. ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் ரூ.4000 வழங்கப்படும். முதல்கட்டமாக இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும்.

2. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மே 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

3. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும்

4. அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்.

5. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை 100 நாள்களில் நிறைவேற்றும் திட்டத்துக்கு கையெழுத்திடப்பட்டுள்ளது. 

click me!