5 நாட்கள்... 16 மாவட்டங்களின் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jul 17, 2021, 1:55 PM IST
Highlights

சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, நீலகிரி, கோவையில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், ‘’அரபிக்கடலில் இன்று முதல் 18ம் தேதி வரை கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்றினால் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு. 21ஆம் தேதி வரை வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 21ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் இன்று முதல் வருகின்ற 21ஆம் தேதி வரை தெற்கு வங்க கடல், மத்திய வங்கக் கடல், கேரளா, லட்சத் தீவு பகுதி, கர்நாடக கடலோரப் பகுதி, தென்மேற்கு அரபிக்கடல் ,மத்திய மேற்கு அரபிக்கடல் ,வடக்கு அரபிக்கடல் ஆகிய இடங்களில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.

click me!