49 பேர் மீதான தேச துரோக வழக்கு ரத்து ! பீகார் போலீஸ் அதிரடி முடிவு !!

Published : Oct 09, 2019, 09:42 PM IST
49 பேர் மீதான தேச துரோக வழக்கு ரத்து ! பீகார் போலீஸ் அதிரடி முடிவு !!

சுருக்கம்

இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முசாபர்நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கும்பல் கொலைகள் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்களுக்கு எதிராக பீகார் மாநிலத்தின் முசாபர்நகர் போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முசாபர்நகர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீகார் போலீசார் ,   இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. 

இதையடுத்து, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளோம். மேலும், பிரபலங்கள் மீது புகார் அளித்த நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உள்ளோம் என தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை