அதுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….. அடித்துக்கூறும் மத்திய அமைச்சர் !

By Selvanayagam PFirst Published Oct 9, 2019, 8:02 PM IST
Highlights

கும்பல் வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய திரை பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பு இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். 

இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தங்கள் கருத்துக்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர். 

இந்த் நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர்,  திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள்  மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.

சில சிறிய கூட்டங்கள், வேண்டுமென்றே மத்திய அரசு மீது, தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார். 

click me!