அதிமுக 46 ஆவது ஆண்டுவிழா !!  போட்டி போட்டுக் கொண்டாடும் டி.டி.வி. – இபிஎஸ் அணிகள் !!!

 
Published : Oct 17, 2017, 09:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
அதிமுக 46 ஆவது ஆண்டுவிழா !!  போட்டி போட்டுக் கொண்டாடும் டி.டி.வி. – இபிஎஸ் அணிகள் !!!

சுருக்கம்

46th anniversery day of admk

அதிமுக கட்சியின் 46வது ஆண்டு தின நிகழ்ச்சி இன்று காலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.  இதே போன்று டி.டி.வி.தினகரன் அணி சார்பிலும் இன்று முதல் அதிமுகவின் 46 ஆவது ஆண்டு விழா, பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கட்சி ஆரம்பித்து இன்றுடன் 46 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அதன் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெறவுள்ளன

இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்

விழாவின்போது, கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றுதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதையொட்டிஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதே போன்று டி.டி.வி.தினகரன் அணி சார்பில் இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் அதிமுக 46 ஆவது ஆண்டு விழாவை சிற்றப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.


 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!