சொத்து சேர்த்ததில் பாஜக முதலிடம் !!  10 ஆண்டுகளில் 900 கோடி குவிப்பு !!!

Asianet News Tamil  
Published : Oct 17, 2017, 07:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
சொத்து சேர்த்ததில் பாஜக முதலிடம் !!  10 ஆண்டுகளில் 900 கோடி குவிப்பு !!!

சுருக்கம்

assets for bjp... bjp is the first party

அதிக அளவில் சொத்து சேர்த்ததில்  பாஜக முதலிடத்தில் உள்ளது என்றும், கடந்த  2004–2005–ம் நிதி ஆண்டில் அக்கட்சியின்  சொத்து மதிப்பு  122 கோடியே 93 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில்  2015–2016–ம் நிதி ஆண்டில் 893 கோடியே 88 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், தங்கள் சொத்து மதிப்பை அவ்வப்போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, பாஜ.க., . காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 7 தேசிய கட்சிகள் தேர்தல் கமி‌ஷனில் தாக்கல் செய்த சொத்து பட்டியலில் உள்ள விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய தொண்டு நிறுவனங்கள் தொகுத்து வெளியிட்டுள்ளன. .

கடந்த 2004–2005–ம் நிதி ஆண்டில் இருந்து 2015–2016–ம் நிதி ஆண்டுவரையிலான 11 ஆண்டு கால சொத்து விவரங்களை இந்த  தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கொல்கத்தாவில் வெளியிட்டனர்.

அதன்படி  சொத்து மதிப்பில் பா.ஜ.க.  முதலிடத்தில் உள்ளது. 2004–2005–ம் நிதி ஆண்டில் பா.ஜ.க. வின்  சொத்து மதிப்பு ரூ.122 கோடியே 93 லட்சமாக இருந்தது. அது, 2015–2016–ம் நிதி ஆண்டில் ரூ.893 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின்  சொத்து மதிப்பு ரூ.167 கோடியே 35 லட்சத்தில் இருந்து ரூ.758 கோடியே 79 லட்சமாக உயர்ந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு ரூ.43 கோடியே 9 லட்சத்தில் இருந்து ரூ.559 கோடியாக உயர்ந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சொத்து மதிப்பு ரூ.90 கோடியே 55 லட்சத்தில் இருந்து ரூ.437 கோடியே 78 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சொத்து மதிப்பு ரூ.5 கோடியே 56 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடியே 18 லட்சமாக அதிகரித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரசின் சொத்து மதிப்பு வெறும் 25 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.44 கோடியே 99 லட்சமாக அதிகரித்துள்ளது.

தேசியவாத காங்கிரசின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சத்தில் இருந்து ரூ.14 கோடியே 54 லட்சமாக உயர்ந்துள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!
Exit Poll 2026: மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.! தளபதி விஜய் கையில் 24 முத்துக்கள்.! அதிமுகவின் நிலை என்ன தெரியுமா?