என்ன அப்பவவே ஜெயில்ல தள்ள காங்கிரஸ்காரங்க  பிளான் பண்ணினாங்க !! மோடி சொல்லும் அதிர்ச்சி தகவல் !!!

 
Published : Oct 17, 2017, 06:48 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
என்ன அப்பவவே ஜெயில்ல தள்ள காங்கிரஸ்காரங்க  பிளான் பண்ணினாங்க !! மோடி சொல்லும் அதிர்ச்சி தகவல் !!!

சுருக்கம்

congress party plan to send prison me...modi speech

தான் குஜராத் முதலமைச்சராக  இருந்தபோது என்னை ஜெயிலில் தள்ள காங்கிரஸ் சதி செய்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே பட் கிராமத்தில் பாஜக சார்பில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்  பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நரோந்திர மோடி, நேரு குடும்பத்துக்கு குஜராத்தையும், குஜராத்திகளையும் பிடிக்காது என அதிரடியாக தெரிவித்தார்.. குஜராத்தை சேர்ந்த சர்தார் வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய் ஆகியோரை நேரு குடும்பம் பல முறை அவமானப்படுத்தியதாக தெரிவித்த மோடி,  சர்தார் சரோவர் அணை திட்டம், சர்தார் வல்லபாய் பட்டேல் கனவு கண்ட திட்டம் என்பதால், 50 ஆண்டுகள் ஆகியும் அத்திட்டம் முடிவடைய  காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என கூறினார்.

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், காங்கிரஸ் கட்சி, மதவாதம், சாதிவாதம் என்று பேசி வருகிறது. வளர்ச்சி கோஷத்தை முன்வைத்து இந்த தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாரா? என அவர் சவால் விடுத்தார்.

தான் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து கொண்டிருந்ததாகவும்,. அப்போது, தன்னை ஜெயிலில் தள்ள காங்கிரஸ் சதித்திட்டம் தீட்டியது என தெரிவித்த மோடி, அப்போது. அமித் ஷா வெளியே இருந்தால், அது சாத்தியம் இல்லை என்று கருதி, அவரை ஜெயிலில் அடைத்ததாக குற்றம்சாட்டினார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவும், ராகுல் காந்தியும் ஜாமீனில் வெளியே உள்ளனர். ஒட்டுமொத்த கட்சியும் ஜாமீனில்தான் உள்ளது. எங்களை தலித் விரோத கட்சி, நகர்ப்புற கட்சி என்று காங்கிரஸ் சொல்கிறது. ஆனால், அதிகமான தலித் எம்.பி.க்களும், கிராமப்புற எம்.பி.க்களும் பா.ஜனதாவில்தான் உள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!