கந்தூரி திருவிழாவிற்கு விலையில்லாத 45 கிலோ சந்தனகட்டைகள்.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

By Ezhilarasan BabuFirst Published Jul 13, 2021, 12:30 PM IST
Highlights

கந்தூரி திருவிழாவிற்கு விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012ம் ஆண்டு அறிவித்தார்.

ஜூலை மாதம் நடைப்பெறவுள்ள சின்ன ஆண்டவர் கந்தூரி திருவிழா மற்றும் ஜனவரி 2022ம் ஆண்டு நடைப்பெறவுள்ள பெரிய ஆண்டவர் கந்தூரி திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனகட்டைகளை இலவசமாக வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் மிக முக்கியமானது நாகூர் தர்கா. 

சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு கந்தூரி திருவிழாவிற்கு விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012ம் ஆண்டு அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, 2013ம் ஆண்டு முதல், நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இந்த முறை நடைப்பெறவுள்ள திருவிழாவிற்கு சுமார் 45கிலோ சந்தனகட்டைகள் தேவைப்படுவதாக தர்கா நிர்வாகம் சார்பில் தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையின் அடிப்படையில், நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 45 கிலோ சந்தன கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 

click me!